தமிழக அரசியலில் 2026 சட்டமன்ற தேர்தல் களம் உச்சகட்ட பரபரப்பை எட்டியுள்ள நிலையில், முன்னணி நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தி ஒட்டுமொத்த அரசியல் வட்டாரத்தையும் அதிரவைத்துள்ளது. நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைவதற்கு நடிகை த்ரிஷா ஒரு ‘ராஜதந்திர கருவியாக செயல்படுகிறார் என்ற தகவல் காட்டுத்தீயாக பரவி வருகிறது. விஜய்யின் அரசியல் நகர்வுகளை தீர்மானிக்கும் பின்னணி சக்தியாக த்ரிஷா உருவெடுத்துள்ளாரா என்றும், டெல்லி மேலிடத்துடன் தவெகவுக்காக அவர் ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறாரா என்றும் அடுக்கடுக்கான கேள்விகள் சமூக வலைதளங்களில் விவாதிக்கப்படுகின்றன.
குறிப்பாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் மகனுடன் த்ரிஷா பேச்சுவார்த்தை நடத்தியதாக அந்த நாளிதழில் வெளியான தகவல், கூட்டணியில் நிலவும் இழுபறியை தீர்க்க எடுக்கப்படும் ஒரு முயற்சியாக பார்க்கப்படுகிறது. பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் இடையே நிலவும் விரிசலை பயன்படுத்தி, விஜய்க்கு சாதகமான ஒரு மெகா கூட்டணியை உருவாக்கத் த்ரிஷா களம் இறக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தி தெரிவிக்கிறது. ஒரு நடிகையாக திரைத்துறையில் உச்சத்தில் இருக்கும் த்ரிஷா, திடீரெனஅரசியல் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்தச் சூழலில், விஜய்யின் மனைவி சங்கீதா முன்னதாகவே விவாகரத்து கோரி நீதிமன்றத்தை அணுகியது மற்றும் அதில் ஒரு நடிகையுடனான தொடர்பு குறித்து குறிப்பிட்டதாக சொல்லப்படும் தகவல்கள் இப்போது மீண்டும் பேசுபொருளாகியுள்ளன. “சங்கீதா அன்று சொன்னதெல்லாம் சரிதானோ?” என்ற சந்தேக கணைகளை நெட்டிசன்கள் தொடுத்து வருகின்றனர். விஜய்யின் அரசியல் வாழ்க்கையிலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் த்ரிஷாவின் தலையீடு அதிகரித்து வருவது தவெக தொண்டர்களிடையே ஒருவித அதிருப்தியை உருவாக்கியுள்ளது. ஒரு கட்சியின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முடிவுகளை ஒரு நடிகை முன்னின்று எடுப்பது கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் என அவர்கள் அஞ்சுகின்றனர்.
ஏற்கனவே ஒரு திருமண நிகழ்ச்சியில் விஜய்யும் த்ரிஷாவும் ஒரே மாதிரியான உடையில் ஜோடியாக தோன்றியது வெறும் தற்செயல் அல்ல, அது ஒரு திட்டமிடப்பட்ட அரசியல் மற்றும் தனிப்பட்ட வெளிப்பாடு என்றே விமர்சகர்கள் கருதுகின்றனர். இந்த நெருக்கம் தான் தற்போது டெல்லி வரையிலான அரசியல் தொடர்புகளுக்குப் பாலமாக அமைந்துள்ளது என சொல்லப்படுகிறது. விஜய்யால் நேரடியாக செய்ய முடியாத சில பேச்சுவார்த்தைகளை த்ரிஷா மூலம் டெல்லி மேலிடத்திற்கு தெரியப்படுத்தப்படுவதாக அந்த நாளிதழ் செய்தி விவரிக்கிறது.
2026 தேர்தலுக்கு பிறகு த்ரிஷா முறைப்படி தமிழக வெற்றி கழகத்தில் இணைவாரா என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. தற்போது திரைக்கு பின்னால் இருந்து செயல்படும் அவர், தேர்தல் முடிவுகளுக்கு பிறகு ஒரு முக்கிய பொறுப்பை ஏற்கக்கூடும் என தெரிகிறது.
ஆனால் இவை அனைத்துமே அந்த நாளிதழின் கற்பனையாக இருக்கலாம் என்பதும், இதில் துளிகூட உண்மை இருக்க வாய்ப்பு இல்லை என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
