அருவியில் குளித்த சுற்றுலா பயணிகள்.. அவிழ்த்து வைத்த  உடைகளை அள்ளிச்சென்ற போலீஸ்.. என்ன காரணம்?

கர்நாடக மாநிலத்தில் ஆபத்தான அருவி ஒன்றில் கொண்டிருந்த சுற்றுலா பயணிகளின் உடைகளை திடீரென காவல்துறை அதிகாரிகள் அள்ளி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சுற்றுலா பயணிகள் உள்ளாடையுடன் நின்று கொண்டிருந்த வீடியோ…

falls

கர்நாடக மாநிலத்தில் ஆபத்தான அருவி ஒன்றில் கொண்டிருந்த சுற்றுலா பயணிகளின் உடைகளை திடீரென காவல்துறை அதிகாரிகள் அள்ளி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சுற்றுலா பயணிகள் உள்ளாடையுடன் நின்று கொண்டிருந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள ஆபத்தான அருவி ஒன்றில் குளிக்க தடைவிதித்து காவல்துறையினர் அறிவிப்பு வெளியிட்டு இருந்தனர். ஆனால் அந்த அறிவிப்பை கண்டு கொள்ளாத சில சுற்றுலா பயணிகள் ஆபத்தான பகுதிக்கு சென்று குளித்துக் கொண்டிருந்தனர்
பலமுறை சுற்றுலா பயணிகளுக்கு காவல்துறையினர் மென்மையாக எச்சரிக்கை விடுத்தும் யாரும் கேட்பதாக தெரியவில்லை. இதனால் வெறுத்து போன காவல் துறையினர் ஒரு கட்டத்தில் அவர்கள் களைந்து வைத்திருந்த ஆடைகளை எடுத்து செல்ல ஆரம்பித்தனர்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து சுற்றுலா பயணிகள்  உள்ளாடையுடன் ஓடி வந்து காவல்துறை அதிகாரிகளிடம் ஆடைகளை தருமாறு கெஞ்சினர். தங்கள் உடைகளை கொடுக்காவிட்டால் வேறு உடையை எடுக்க நாங்கள் வெகு தூரம் செல்ல வேண்டும் என்றும் கூறினர்.

இதனை அடுத்து காவல்துறையினர் இனிமேல் ஆபத்தான அருவியில் குளிக்க மாட்டேன் என்று உறுதிமொழி வாங்கிக் கொண்ட பின்னர் உடைகளை திருப்பிக் கொடுத்தனர். இது குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.