வருமான வரி தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்.. இந்த ஆண்டு தான் உச்சம்..!

By Bala Siva

Published:

ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 31ஆம் தேதிக்குள் வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்ய வேண்டும் என்று கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் இன்றுடன் அந்த கால அவகாசம் முடிவடைகிறது. எனவே இதுவரை வருமான வரி தாக்கல் ரிட்டர்ன் செய்யாதவர்கள் இன்று இரவுக்குள் தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வருமானவரி தாக்கல் செய்யும் காலக்கெடு நீடிக்கும் என்று தகவல் வெளியான நிலையில் இப்போது வரை அது குறித்த எந்த தகவலும் அதிகாரப்பூர்வமாக வரவில்லை. எனவே இன்று கடைசி நாள் என்பதால் 2023 – 24ஆம்  நிதியாண்டுக்கான வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்யும் கால அவகாசம் நீடிக்கும் என்று எதிர்பார்ப்பு இல்லாமல் உடனடியாக தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

இன்றைய தினத்திற்குள் வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்யாவிட்டால் வரி செலுத்துபவர்கள் பழைய வழிமுறையின் கீழ் சலுகைகள் பெற முடியாது என்பதும் அது மட்டுமின்றி தாமதமாக தாக்கல் செய்வதற்கு அபராதமும் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜூலை 26 வரை 5 கோடி நபர்கள் வருமான வரி தாக்கல் செய்துள்ளதாகவும் இரு இந்த ஆண்டின் புதிய உச்சம் என்றும் கூறப்படுகிறது. 2023 – 24 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்யும் மொத்த நபர்களின் எண்ணிக்கை 6 கோடியை நெருங்கும் என்று கூறப்படுகிறது.

இருப்பினும் 140 கோடி மக்கள் தொகை உள்ள இந்தியாவில் வெறும் ஆறு கோடி பேர் தான் வருமான வரி தாக்கல் செய்கின்றனர் என்பது மிகவும் குறைவான எண்ணிக்கை என்றும் வருமானவரி தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க இன்னும் சில நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.