காவல் துறையினருக்கு குட் நியூஸ்.. சலுகைக் கட்டணத்தில் பஸ் பாஸ் வாங்க ரெடியா?

By John A

Published:

தமிழக காவல் துறையில் பணியாற்றும் கடை நிலைக் காவலர்கள் முதல் ஆய்வாளர்கள் வரை தினமும் பணி நிமித்தமாக மாவட்டத்தின் பல்வேறு இடங்களுக்குச் செல்கின்றனர். குற்றவாளிகளைத் தேடுவது, நீதி மன்றப் பணிகள், விசாரணைப் பணிகள் போன்ற பல்வேறு பணிகள் இருப்பதால் தினமும் பல இடங்களுக்குச் செல்கின்றனர். அவ்வாறு செல்கையில் பேருந்தில் பயணிக்கும் போது தங்களுடைய அடையாள அட்டை, நீதிமன்ற உத்தரவு ஆகியவற்றை நடத்துனரிடம் காட்டி இலவசப் பயணம் மேற்கொள்ளலாம். இவ்வாறு நடைமுறை இருக்கையில் இனி சொந்த நிமித்தமாகச் செல்வதற்கும் பஸ்பாஸ் வழங்கப்பட உள்ளது.

ஆதார் கார்டு, கிரெடிட் கார்டு, சிம்கார்டு.. இந்த மூன்றிலும் டிசம்பர் முதல் முக்கிய மாற்றம்..!

ஸ்மார்ட் அடையாள அட்டை வடிவில் தயாராகும் இந்த பஸ் பாஸை வைத்து சலுகைக் கட்டணத்தில் மாவட்டத்திற்குள் அரசுப் பேருந்துகளில் பயணம் செய்து கொள்ளலாம். இதனால் காவல் துறையில் பணியாற்றும் காவலர்களுக்கு பயணச் செலவு குறைகிறது. ஏற்கனவே போக்குவரத்துத் துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு அரசுப் பேருந்துகளில் இலவசப் பயண அட்டை வழங்கப்பட்டிருக்கிறது. இதுமட்டுமன்றி மாணவர்களுக்கும் பஸ் பாஸ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் பத்திரிக்கையாளர்கள், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோருக்கும் பஸ் பயணத்தில் சலுகை வழங்கப்படுகிறது.

இந்நிலையில் காவல் துறைக்கும் இனி ஸ்மார்ட் அடையாள அட்டை வழங்கப்பட உள்ளதால் காவல் துறையினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த அடையாள அட்டையைப் பெற விருப்பம் உள்ள காவலர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை டிசம்பர் 16-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.