டிக் டாக் என்றால் வீடியோ சமூக வலைதளம் உலகம் முழுவதும் பிரபலமாக இருந்தாலும் இந்தியா உள்பட ஒரு சில நாடுகளில் மட்டும் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் தென்கிழக்கு ஆசியாவில் மீண்டும் டிக் டாக் கவனம் செலுத்த இருப்பதாகவும் இதற்காக பில்லியன் கணக்கிலான டாலர்களை புதிய முதலீடு செய்ய இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
அடுத்த மூன்று ஆண்டுகளில் தென்கிழக்கு ஆசியாவில் பில்லியன் கணக்கான டாலர்களை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக டிக்டாக் தலைமை நிர்வாக அதிகாரி ஷோ ஜி செவ் அறிவித்தார். டிக்டாக்கின் இ-காமர்ஸ் வணிகம், உள்ளடக்க உருவாக்கம் மற்றும் படைப்பாளிகளின் பொருளாதாரம் ஆகியவற்றின் வளர்ச்சிக்கு இந்த முதலீடு பயன்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
டிக்டாக் செயலி மிக வேகமாக வளர்ந்து வரும் சந்தைகளில் ஒன்றான தென்கிழக்கு ஆசியாவில் மட்டும் 200 மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் கொண்டுள்ளது என்றும், தென்கிழக்கு ஆசியாவில் டிக்டோக்கின் இ-காமர்ஸ் வணிகத்தின் வளர்ச்சியை திட்டமிடப்பட்டிருப்பதாகவும் ஷோ ஜி செவ் தெரிவித்தார்.
மேலும் எங்கள் நிறுவனத்தின் இ-காமர்ஸ் தளமான TikTok Shop தென்கிழக்கு ஆசியாவில் நல்ல வருவாய் தந்து கொண்டிருப்பதாகவும், கடந்த 2022ஆம் ஆண்டு $4 பில்லியனுக்கும் அதிகமாக வர்த்தகம் இருந்த நிலையில் 2023 இல் தென்கிழக்கு $12 பில்லியனை எட்டுவதை இலக்காகக் கொண்டுள்ளது என்றும் தெரிவித்தார்.