இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு(101). முதுமை மற்றும் உடல்நிலை காரணமாக தற்போது மரணம் அடைந்திருக்கிறார். 1924 ஆம் வருடம் ஸ்ரீ வைகுண்டத்தில் பிறந்தவர் நல்லக்கண்ணு.. சுப்பிரமணிய பாரதி மற்றும் வஉ சிதம்பரம் பிள்ளை ஆகியோரை பின்பற்றி இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றுள்ளார்.
நெல்மூட்டை பதுக்கலுக்கு எதிராக 18 வயதில் தனது சொந்த ஊரில் போராட்டம் நடத்தியவர் நல்லக்கண்ணு. அந்த வயதிலேயே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில்சேர்ந்தார்.. தன் வாழ்நாளில் பல வருடங்கள் சிறையில் கழித்திருக்கிறார். கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தது முதலில் பணம், பதவிக்கு ஆசைப்படாமல் மக்கள் சேவையை குறிக்கோளாகக் கொண்டு பணியாற்றி வந்தார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளராக 13 ஆண்டுகள் பதவி வகித்திருக்கிறார்.. மேலும் விவசாய தொழிலாளர் சங்க தலைவராக 25 ஆண்டுகள் இருந்துள்ளார்.. சாதி கொடுமைகளுக்கு எதிராக போராட்டம் நடத்தி இருக்கிறார்..
கடந்த சில நாட்களாகவே உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் நல்லக்கண்ணுவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில்தான் கடந்த இரண்டு நாட்களாக அவரின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. இந்நிலையில்தான் தற்போது அவர் மரணமடைந்திருக்கிறார்.. அவரிடம் மறைவுக்கு முதல்வர் முக ஸ்டாலின் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
