பாஸ்வேர்டு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக என்ற Two-Factor Authentication ஆப்ஷனை பலர் பயன்படுத்தி வரும் நிலையில் இதை பயன்படுத்தினால் கூட பாஸ்வேர்டை மால்வேர் ஒன்றின் மூலம் திருட முடியும் என்று கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மால்வேர் ஆனது உலகளவில் பயனர்களுக்கு ஒரு தீவிரமான கவலையாக மாறியுள்ளது. ஏனெனில் பயனர்களின் சாதனங்களில் இருந்து முக்கியமான தகவல்களை அவர்களுக்கு தெரியாமல் இந்த மால்வேர் திருடுகிறது. இந்த மால்வேர் தற்போது கிழக்கு ஆசியாவை குறிவைப்பதாகவும், 1 லட்சத்திற்கும் அதிகமான டவுன்லோடுகளை கொண்டிருப்பதால் பயனர்கள் பெரும் அச்சத்துடன் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த மால்வேர் பாஸ்வேர்டு மற்றும் டூ-ஃபாக்டர் அதென்டிகேஷன் (2FA) குறியீடுகள் இருந்தாலும் பாஸ்வேர்டை திருடுகிறது என்று கூறப்படுகிறது.
எல்லா மால்வேரைப் போலவே, இது உங்கள் கணினிக்குள் உங்களுக்கே தெரியாமல் நுழைகிறது. கிழக்கு ஆசியாவில் ஃபிஷிங் மின்னஞ்சல் மூலம் இந்த மால்வேர் கம்ப்யூட்டர், லேப்டாப், ஸ்மார்ட்போன் ஆகியவற்றில் நுழைவதாகவும், இந்த மால்வேர் நுழைந்ததை பல பயனர்கள் நீண்ட காலத்திற்கு கவனிக்கப்படாமல் போகும் சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஃபிஷ்ஷிங் மின்னஞ்சலில் உள்ள ஹைப்பர்லிங்க்கில் போலியான அப்ளிகேஷனின் ஃபோனி APK இருக்கும் என்றும், இவை நம் சாதனங்களில் நுழைந்தால் அவ்வளவு தான் என்றும் கூறப்படுகிறது. இந்த மால்வேர் முதலில் பாதிக்கப்பட்டோரின் டேட்டாவை சேகரித்து வங்கி கணக்கு, கிரெடிட் கார்டு தகவலைப் பதிவு செய்த பிறகு 10 நிமிடங்களுக்குள் தனது மோசடி வேலையை தொடங்கிவிடும் என்று கூறப்படுகிறது.