திருவண்ணாமலை அண்ணமாலையார் மலையில் நேற்று நள்ளிரவு பலத்த மழையால் மண்சரிவு ஏற்பட்டது. அண்ணமாலையார் மலைப்பகுதி அடிவாரத்தில் அமைந்துள்ள வ.உ.சி.நகர் பகுதியில் ஏற்பட்ட மண்சரிவால் 11வது தெருவில் பாறைகள் உருண்டு விழுந்து வீடுகளைச் சேதப்படுத்தின.
இதனால் அவ்வீட்டில் இருந்த சிறுமி உள்ளிட்ட 7 பேரை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஃபெஞ்சல் புயல் காரணமாக வட தமிழகம் முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பள்ளிகள் உள்ளிட்டவற்றிற்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. மேலும் சில மாவட்டங்களில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடப்பட்டிருந்து.
வட தமிழக மாவட்டமான திருவண்ணாமலையில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக அண்ணமாலையார் மலைப் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. தற்போது அப்பகுதியில் வசித்தவர்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்று காலை மீண்டும் மற்றொரு நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது.
ஒவ்வொரு தடைக்கல்லும் படிக்கல்.. அடிக்க அடிக்க இருமடங்கு வலிமையாகி வரும் அதானி நிறுவனம்..
இதனால் பொது மக்கள் அலறிய படியே வீட்டை விட்டு வெளியேறினர். மேலும் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிக்கு மீட்புப் படையினர் மற்றும் காவல் துறையினர் உடனடியாக அவர்களை அவ்விடத்திலிருந்து வெளியேற்றினர். பாறை கற்களோடு கலந்து மண்சரிவு ஏற்பட்டதால் அதிலிருது மழைநீர் பீறிட்டு வருகிறது.
மீட்புப் பணிகளை அமைச்சர் எ.வ. வேலு முடுக்கி விட்டுள்ளார். மேலும் ஐஐடி உள்ளிட்ட நிறுவனங்களின் தொழில்நுட்ப வல்லுநர்களும் மலைச்சரிவு ஏற்பட்ட இடத்தில் சென்று ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். மலைப்பகுதி என்பதால் இயந்திரங்களைக் கொண்டு செல்வதில் சிக்கல் உள்ளதால் மீட்புப் படையினரே உருண்ட பாறைகள் மற்றும் மண் சரிவினைச் சமப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருக்கின்றனர்.