சீமானின் 36 லட்சம் வாக்குகள் விஜய்யிடம் பறிபோகிறதா? அந்த கோபத்தில் தான் ‘அணில்’ ‘பைத்தியக்காரன்’ என்று நாகரீகம் இல்லாமல் சீமான் பேசுகிறாரா? விஜய் வெற்றியை திமுக, அதிமுகவே தடுக்க முடியாத நிலையில் சீமான் எல்லாம் எம்மாத்திரம்.. 15 வருடங்கள் அரசியல் கட்சி நடத்தியும் டெபாசிட் வாங்கவே முடியாத ஒரு கட்சியால் விஜய்யை என்ன செய்துவிட முடியும்? தவெக தொண்டர்கள் ஆவேச பதிலடி..!

  தமிழக அரசியலில் 2026 சட்டமன்ற தேர்தல் என்பது ஒரு மிகப்பெரிய அதிகார போட்டிக்கான களமாக உருவெடுத்துள்ளது. குறிப்பாக, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் முறைப்படி அரசியலில் தடம் பதித்துள்ளது, ஏற்கனவே களத்தில்…

vijay vs seeman

 

தமிழக அரசியலில் 2026 சட்டமன்ற தேர்தல் என்பது ஒரு மிகப்பெரிய அதிகார போட்டிக்கான களமாக உருவெடுத்துள்ளது. குறிப்பாக, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் முறைப்படி அரசியலில் தடம் பதித்துள்ளது, ஏற்கனவே களத்தில் இருக்கும் நாம் தமிழர் கட்சி போன்ற மாற்று அரசியல் பேசும் கட்சிகளுக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது. விஜய்யின் வருகை சீமானின் வாக்கு வங்கியில் மிகப்பெரிய சரிவை ஏற்படுத்தும் என்றும், குறிப்பாக இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்களின் ஆதரவு விஜய்யை நோக்கி நகர்வதால் நாம் தமிழர் கட்சி அரசியல் ரீதியாகப் பலவீனமடையும் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். இந்த ஆற்றாமையின் வெளிப்பாடாகவே நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் சீமான் ஆகியோர் விஜயை தனிப்பட்ட முறையில் விமர்சித்து வருவதாக கூறப்படுகிறது.

சீமான் மற்றும் அவரது கட்சியினர் விஜய்யை ‘அணில்’ என்றும் ‘பைத்தியக்காரன்’ என்றும் விமர்சிப்பது, அரசியல் நாகரிகமற்ற செயல் என்று தவெக தொண்டர்கள் கொதிப்படைகின்றனர். குறிப்பாக, நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் போன்றவர்கள் தொடர்ச்சியாக விஜய் குறித்து அவதூறு வீடியோக்களை வெளியிட்டு வருவது, ஒரு திட்டமிட்ட அஜெண்டாவாகவே பார்க்கப்படுகிறது. விஜய்யின் வளர்ச்சியை தடுக்க முடியாது என்ற விரக்தியில், திமுகவிற்கு ஆதரவாக செயல்பட்டு மாற்று அரசியல் வாக்குகளை சிதறடிக்க இவர்களுக்கு பெரிய அளவில் பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாக கூறப்படும் புகார்கள் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன.

தம்பி தம்பி என்று அழைத்து வந்தவர்கள், இன்று விஜய்யைத் தரம் தாழ்ந்து விமர்சிப்பது அவர்களின் அரசியல் எதிர்காலம் குறித்த பயத்தையே காட்டுகிறது. சமீபத்திய கருத்துக்கணிப்புகள் திமுகவிற்கு சாதகமாக இருந்தாலும், விஜய்யின் தவெக சுமார் 70 இடங்கள் வரை பிடிப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில், நாம் தமிழர் கட்சிக்கு வெறும் ஒரு இடம் மட்டுமே கிடைக்கும் என்ற கணிப்பு சீமானை நிலைதடுமாற செய்துள்ளது. விஜய் ஒரு மாற்று சக்தியாக உருவெடுத்தாலும், அவர் நிறுத்தும் வேட்பாளர்களின் தகுதி மற்றும் அவர்களின் செயல்பாடுகள் மக்களிடம் எப்படிச் சென்றடையும் என்பதுதான் தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கும்.

விஜய்யின் அமைதியான போக்கும், சில முக்கிய பிரச்சனைகளில் அவர் மௌனம் காப்பதும் ஒரு விமர்சனமாக இருந்தாலும், அவர் யாருடைய வாக்குகளை அதிகம் பிரிக்க போகிறார் என்பதுதான் தற்போதைய மர்மமாக உள்ளது. விஜய்யின் தேர்தல் சின்னம் குறித்த எதிர்பார்ப்புகளும் மக்களிடையே அதிகரித்துள்ளன. அவர் தேர்தல் ஆணையத்திடம் ‘வெற்றி கோப்பை’ சின்னத்தை கேட்டு விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆறு பொதுவான சின்னங்களுக்கு மத்தியில், தனது விருப்பமாக அவர் ஒரு சின்னத்தை பரிந்துரைக்க முடியும் என்ற விதியின் அடிப்படையில், வெற்றி கோப்பை சின்னத்தை அவர் தேர்வு செய்திருக்கலாம். இது கிடைத்தால், அவரது அரசியல் பயணத்தின் அடையாளமாக அது மாறும்.

மேலும், விஜய் எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்ற யூகங்களும் வலுத்துள்ளன. பொதுவாக சினிமா கவர்ச்சி மற்றும் பாமர மக்களின் ஆதரவு அதிகம் உள்ள தொகுதிகளை தேர்ந்தெடுப்பது எம்ஜிஆர் முதல் விஜயகாந்த் வரை பின்பற்றிய ஒரு வியூகமாகும். அந்த வகையில், மதுரை அல்லது அவரது பூர்வீகமான திருநெல்வேலி மாவட்டத்தின் ராதாபுரம் தொகுதி அவரது தேர்வாக இருக்கலாம். மதுரை மேற்கு அல்லது தெற்கு மாவட்டங்களில் விஜய் போட்டியிட்டால் அவருக்கு சாதிய மற்றும் மத ரீதியான ஆதரவு வாக்குகள் அதிகம் கிடைக்க வாய்ப்புள்ளது. திருநெல்வேலி பகுதியில் அவர் போட்டியிடுவது ‘மண்ணின் மைந்தன்’ என்ற உணர்வை தூண்டும்.

அதே நேரத்தில், திமுக எதிர்ப்பு என்பதுதான் அவரது பிரதான கொள்கையாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், அதிமுக மற்றும் பாஜக செய்யும் தவறுகளையும் அவர் சுட்டிக்காட்ட வேண்டியது அவசியம். நான்கு முனை போட்டி நிலவும் போது, வெறும் ஒரு கட்சியை மட்டும் விமர்சிப்பது மற்றவர்களுக்கு சாதகமாக முடிந்துவிடும். எனவே, அனைத்து தரப்பு பலவீனங்களையும் வெளிச்சம் போட்டு காட்டும் ஒரு வலுவான தேர்தல் பிரச்சார வியூகத்தை தவெக வகுக்க வேண்டியது கட்டாயமாகிறது.

நிச்சயமாக 2026 தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, தமிழக அரசியலில் சில கட்சிகள் அனாதையாகும் நிலை ஏற்படும் என்பது பலரின் கணிப்பாக உள்ளது. சீமான் தனது 36 லட்சம் வாக்குகளில் பெரும் பகுதியை விஜய்யிடம் இழக்க நேரிடும் என்றும், இதனால் நாம் தமிழர் கட்சி நோட்டாவிற்கு அடுத்த நிலைக்கு தள்ளப்படும் என்றும் கூறப்படுகிறது. விஜய்யின் அரசியல் வருகை என்பது ஒரு தனிநபர் வெற்றி என்பதை தாண்டி, தமிழகத்தின் திராவிட மற்றும் தமிழ் தேசிய அரசியலில் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்துமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.