வடிவேலுவின் புகழ்பெற்ற காமெடிகளில் ஒன்றுதான் கிணறு காமெடி. கண்ணும் கண்ணும் படத்தில் இடம்பெற்ற இந்தக் காமெடியில் வடிவேலு தன்னுடைய நிலத்தில் இருந்த கிணற்றைக் காணவில்லை கண்டுபிடித்துக் கொடுங்கள் என்று காவல் துறையில் புகார் அளிப்பார். பின்னர் காவல்துறையினருடன் வந்து இந்த இடத்தில் தான் கிணறு இருந்தது. அதை எடுத்துவிட்டு பனைமரத்தை நட்டு வைச்சிருக்காங்க.. என்று போலீசாருக்கு ஷாக் கொடுப்பார். இந்தக் காமெடி வெகு பிரபலமானது. மீம்ஸ்களிலும் இன்றுவரை டிரெண்டிங்கில் இருப்பது.
தங்கத்தை நகையாக வாங்கும் போது ஏற்படும் இரு மடங்கு நஷ்டங்கள்..!
தற்போது இந்தக் காமெடி போலவே நிஜத்திலும் ஒரு சம்பவம் நடைபெற்றிருக்கிறது. மத்தியப்பிரதேசத்தில் தான் இந்தச் சம்பவம் நடைபெற்றிருக்கிறது. ம.பி-யில் உள்ள புர்ஹான்பூர் மாவட்டம் காகர்கலா பகுதியைச் சேர்ந்த தேவ்தாஸ் என்ற விவசாயி தனது நிலத்தில் இருந்த கிணற்றினை கடந்த 6 மாதங்களாகக் காணவில்லை என்று ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்திருக்கிறார். அதிர்ச்சியாக இருக்கிறதா? இதுகுறித்து பல முறை புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனப் புலம்பியிருக்கிறார் தேவ்தாஸ்.
பின்னர் நிலத்தினை பிரிக்கும் போது பத்திரப்பதிவில் எழுத்தர் மதுபோதையில் தவறுதலாக குறிப்பிட்டிருந்ததும், கிணறு அவரது நிலத்திலேயே இருப்பதும் தெரிய வந்தது. அதன்பின் நிம்மதி அடைந்திருக்கிறார் அந்த விவசாயி. வடிவேலு காமெடியில் வரும் செய்திகள் எல்லாம் நிஜமாகி வருகிறது என நெட்டிசன்கள் கலாய்க்கின்றனர்.