தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வந்தவர் விஜய். புகழின் உச்சியில் இருந்தபோதும் இவர் நடித்த படங்களெல்லாம் ஹிட் தான் என்ற போதும் இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் இவருக்காக காத்திருந்த போதும் சினிமாவிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து அரசியலில் களமிறங்க போவதாகவும் கூறியிருந்தார் விஜய்.
அதன்படி தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சி ஒன்றை ஆரம்பித்து கட்சியின் கொடியையும் பாடலையும் வெளியிட்டார். அடுத்ததாக தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் நேற்று நடைபெற்றது. மாநாட்டின் ஏற்பாடுகள் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
விக்கிரவாண்டி சாலையே ஸ்தம்பித்து போகும் அளவுக்கு வாகனங்களும் தொண்டர்களும் கூடி இருந்தனர். விஜய் அனல் பறக்கும் பேச்சினால் தெறிக்க வைத்துவிட்டார். கட்சியின் கொள்கைகளும் உறுதிமொழிகளையும் அனைத்தையும் அவர் விளக்கமாக எடுத்து பேசினார்.
அனைவருக்கும் சமபங்கு சம உரிமை பசிக்கு சோறு இருப்பதற்கு வீடு பிழைப்புக்கு வேலை தருவது அரசின் கடமை அது நமது கட்சி செய்யும், என்னை இந்த அளவுக்கு ஆதரவளித்து வைத்திருக்கும் தமிழ் மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தான் அரசியலுக்கு வந்தேன், பல கோடி சம்பளம் இருந்தும் சினிமா வேலையை விட்டுவிட்டு உங்களுக்காக வந்திருக்கிறேன் என்று கூறினார் விஜய்.
நேற்றைய தினம் வெற்றிகரமாக நடிகர் விஜயின் மாநாடு நடந்து முடிந்தது. இன்றளவும் ட்ரெண்டிங்கில் விஜய் அவர்களின் மாநாடு பற்றி தான் பேச்சுக்கள் நடந்து கொண்டிருக்கிறது. அறிக்கையின்படி விஜயின் மாநாட்டிற்கு கிட்டத்தட்ட 10 லட்சம் மக்கள் வந்திருந்தனர். அது மட்டும் அல்லாமல் இந்த மாநாட்டிற்காக நடிகர் விஜய் 83 கோடி ரூபாய் செலவழித்ததாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.