மாணவர்களுடன் உரையாடிக் கொண்டே தரையில் அமர்ந்து சத்துணவு சாப்பிட்ட கலெக்டர்!

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் அரசு பள்ளியினை பார்வையிட்டபோது மாணவர்களுடன் தரையில் அமர்ந்து உணவு சாப்பிட்ட சம்பவம் நெகிழ்ச்சியினை ஏற்படுத்தி உள்ளது. அதாவது ஓட்டப்பிடாரம் அருகே உள்ள பசுவந்தனை என்ற ஊரில் உள்ள அரசு…

Untitled 38

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் அரசு பள்ளியினை பார்வையிட்டபோது மாணவர்களுடன் தரையில் அமர்ந்து உணவு சாப்பிட்ட சம்பவம் நெகிழ்ச்சியினை ஏற்படுத்தி உள்ளது.

அதாவது ஓட்டப்பிடாரம் அருகே உள்ள பசுவந்தனை என்ற ஊரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கு ஆய்வு செய்ய சென்றுள்ளார் கலெக்டர்.

அப்போது மதிய நேரம் என்பதால் மாணவர்கள் சத்துணவு சாப்பிட்டுக் கொண்டு இருந்தனர். உடனே கலெக்டர் மாணவர்களுடன் தரையில் அமர்ந்து பள்ளியில் வழங்கப்பட்ட சத்துணவினைச் சாப்பிட்டார்.

மேலும் அவர் சாப்பிட்டுக் கொண்டே உணவின் தரம் குறித்து மற்ற மாணவர்களிடம் விசாரித்தார். அதுபோக தமிழக அரசு சார்பில் பள்ளி மாணவர்களின் நலனைக் கருத்திக் கொண்டு உருவாக்கப்பட்ட நான் முதல்வன் திட்டம் குறித்துப் பேசியுள்ளார்.

பள்ளியில் ஆய்வினை முடித்த பின்னர் நேரடியாக பசுவந்தனை பஞ்சாயத்து அலுவலகத்திற்குச் சென்றார்.

அங்குள்ள பதிவேடுகளை ஆய்வு செய்து வரி வசூல் குறித்து ஆய்வு செய்து, அதுகுறித்து பஞ்சாயத்து தலைவர் லட்சுமி சிதம்பரத்திற்கு ஆலோசனைகள் கூறினார்.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன