ஈரான் எச்சரிக்கையை மீறி ஹார்முஸ் நீரிணை வழியாக சென்ற 3 தாய்லாந்து எண்ணெய் கப்பல்கள்.. மர்ம ஏவுகணை தாக்குதலால் பற்றி எரியும் கப்பல்.. அமெரிக்கா காப்பாத்தும், பிரிட்டன் காப்பாத்தும்ன்னு எவனாவது ஹார்முஸ் வழியா வந்தீங்க, சாம்பல் தான்.. ஒரு சொட்டு ஆயில் கூட இந்த வழியா போக விடமாட்டோம்.. ஈரானை அடிச்சா உலகத்துக்கே வலிக்கும்ன்னு புரிய வைப்போம்.. கச்சா எண்ணெய் இல்லாமல் உலகமே ஸ்தம்பிக்க போவுது.. நாங்க யாருன்னு இப்ப புரிஞ்சதா.. ஈரான் கொக்கரிப்பு..!

மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கும் ஹார்முஸ் நீரிணையில் மூன்று வணிகக் கப்பல்கள் அடுத்தடுத்துத் தாக்கப்பட்டிருப்பது பெரும்…

thailand ship

மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கும் ஹார்முஸ் நீரிணையில் மூன்று வணிகக் கப்பல்கள் அடுத்தடுத்துத் தாக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகின் மொத்த எண்ணெய் விநியோகத்தில் சுமார் 20 சதவீதம் இந்த பாதை வழியாகவே நடைபெறுகிறது. தற்போது நிலவும் போர்ச்சூழலால் இந்த நீரிணை வழியாக கப்பல்கள் செல்வது பெருமளவில் முடக்கப்பட்டுள்ளது. ஈரானின் இந்த தடையற்ற அச்சுறுத்தல் காரணமாக உலக நாடுகளுக்கு செல்லும் கச்சா எண்ணெய் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் தங்களது தாக்குதல்களை தொடர்ந்தால், மத்திய கிழக்கிலிருந்து ஒரு லிட்டர் கச்சா எண்ணெய் கூட வெளியேற அனுமதிக்க மாட்டோம் என்று ஈரான் பகிரங்கமாக எச்சரித்துள்ளது. இந்த எச்சரிக்கையை தொடர்ந்து ஹார்முஸ் நீரிணையில் ஓமன் நாட்டுக்கு அருகே தாய்லாந்து நாட்டின் மூன்று வணிக கப்பல்கள் மீது மர்மமான முறையில் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் ஒரு கப்பலில் பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து, அதிலிருந்த மாலுமிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இதில் மூன்று மாலுமிகளை காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதி நிறுவனமான சவுதி அராம்கோவின் தலைமை நிர்வாக அதிகாரி அமீன் நாசர், இந்த விவகாரம் குறித்து கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். மத்திய கிழக்கின் எண்ணெய் மற்றும் எரிவாயு தொழில் இதுவரை சந்திக்காத மிகப்பெரிய நெருக்கடியை தற்போது எதிர்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த போர் மற்றும் விநியோக தடை நீடித்தால், உலகளாவிய எண்ணெய் சந்தையில் பேரழிவை ஏற்படுத்தும் விளைவுகள் ஏற்படும் என்றும், இது உலகப் பொருளாதாரத்தையே நிலைகுலையச் செய்யும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இந்த 3 கப்பல்கள் மீதான தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு ராணுவ அமைப்போ அல்லது நாடோ பொறுப்பேற்கவில்லை. இருப்பினும், இந்ப் பகுதியில் நிலவும் பதற்றம் காரணமாக பன்னாட்டு நிறுவனங்களின் காப்பீட்டு கட்டணங்கள் மற்றும் போக்குவரத்து செலவுகள் பல மடங்கு அதிகரித்துள்ளன. ஓமன் கடற்படை மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ள போதிலும், கடலில் நிலவும் பாதுகாப்பற்ற சூழல் மற்ற வணிக கப்பல்களையும் இந்த பாதையை புறக்கணிக்கத் தூண்டுகிறது. இது எரிசக்தி விலையேற்றத்திற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

மொத்தத்தில் வளைகுடாப் பிராந்தியத்தில் நிலவும் இந்த நிலையற்ற தன்மை இந்தியாவை போன்ற எண்ணெய் இறக்குமதியை அதிகம் நம்பியிருக்கும் நாடுகளுக்கு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக உயரக்கூடும் என்பதால், இது எரிபொருள் விலையை மட்டுமல்லாது அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையையும் உயர்த்தும் அபாயம் உள்ளது. வல்லரசு நாடுகளின் ராஜதந்திர நடவடிக்கைகள் தோல்வியடைந்தால், இந்த போர்ச்சூழல் உலகளாவிய பொருளாதார மந்தநிலைக்கு வழிவகுக்கும் என்பதில் ஐயமில்லை.