டெக்ஸ்ட் மட்டும் கொடுத்தால், அது சம்பந்தமான வீடியோவை நமக்கு அளிக்கும் வசதியை பல நிறுவனங்கள் அளித்து வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் கூட, சார்ச் ஜிபிடி, சோரா என்ற ஒரு அம்சத்தை அறிமுகம் செய்து, டெக்ஸ்ட் டு வீடியோ என்ற அம்சத்தை பயனர்களுக்கு வழங்கி வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம். ஆனால், இதில் சந்தா கட்டியவர்களுக்கு மட்டுமே இந்த வசதி உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், தற்போது புதிதாக Veo 2 என்ற நிறுவனம், டெக்ஸ்ட் கொடுத்தால் இமேஜ் மற்றும் வீடியோக்களை வழங்கும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. இந்த இணையதளத்திற்கு சென்று நமக்கு தேவையான டெக்ஸ்ட் மற்றும் இமேஜ் குறித்த தகவல்களை கொடுத்தால், அது உடனே ஒரு சில நொடிகளில் வீடியோவாகவும் இமேஜாகவும் மாற்றி தருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
YouTube பயனர்களுக்கு மிகப்பெரிய வரஸ்பிரசாதமாக இருக்கும் இந்த வசதியின் மூலம், யூடியூபர்கள் தங்கள் வீடியோவின் பின்னணியில் இந்த நிறுவனம் கொடுக்கும் வீடியோவை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும், அது மட்டுமின்றி இந்த வீடியோவை பயன்படுத்தியே புதிதாக யூடியூப் வீடியோவை கூட பதிவு செய்யலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
நவீன டெக்னாலஜி மூலம் வழங்கப்படும் இந்த வீடியோக்கள் இதுவரை இல்லாத அளவில் மிகவும் வித்தியாசமாகவும், கற்பனைக்கு எட்டாத அளவிலும் இருப்பதாக, இதை பயன்படுத்தியவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் இவ்வீடியோக்கள் கண்ணை கவரும் வகையில் இருப்பதாக, இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ள வீடியோக்களுக்கு கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருகின்றன.