அந்த வகையில், ஏற்கனவே டெக்ஸ்ட் மூலம் வீடியோவை ஜெனரேட் செய்யும் சில செயலிகள் இருந்தாலும், தற்போது ஓபன் ஏஐ நிறுவனம் Sora என்ற ஏஐ மாடலை அறிமுகம் செய்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் சோதனை முயற்சியாக இந்த ஏஐ டெக்னாலஜி அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், குறிப்பிட்ட பயனர்கள் மட்டுமே அதை பயன்படுத்தி வந்தனர்.
இந்த நிலையில், தற்போது சாட் ஜிபிடி. ப்ரோ மற்றும் பிளஸ் உறுப்பினர்கள் Sora ஏஐ மாடலை பயன்படுத்தி வீடியோவை உருவாக்க முடியும் என்று அறிவித்துள்ளது. 120 பிக்சல் ரெசல்யூசன், 20 வினாடிகள் கொண்ட வீடியோவை சாட் ஜிபிடி. ப்ரோ பயனர்கள் உருவாக்க முடியும் என்றும், மாதத்திற்கு 50 வீடியோக்கள் வரை இலவசமாக உருவாக்கிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்போதைக்கு, இந்த வசதி ஐரோப்பிய யூனியன், பிரிட்டன், சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளை தவிர, மற்ற அனைத்து நாடுகளிலும் பயன்படுத்த முடியும் என்றும் ஓபன் ஏஐ தெரிவித்துள்ளது.