எலான் மாஸ்க் அவர்களிடம் வேலை பார்ப்பது இதயத்திற்கு நல்லதல்ல என்று டெஸ்லா நிறுவனத்தின் துணைத் தலைவர் ஸ்ரீலா வெங்கடரத்னம் என்பவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து டெஸ்லா நிறுவனத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
உலகின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான எலான் மஸ்க் அவர்களின் டெஸ்லா நிறுவனத்தின் துணை தலைவராக இந்தியாவைச் சேர்ந்த ஸ்ரீலா வெங்கடரத்னம் அவர்கள் கடந்த 11 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார். இவரது வருகைக்கு பின்னரே 100 பில்லியன் வருட வருமானம் 700 மில்லியன் வருட வருமானமாக உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
டெஸ்லா நிறுவனத்தில் பணிபுரிவதை ஆரம்பத்தில் பெருமையாக கருதினேன், ஆனால் எலான் மஸ்கிடம் வேலை செய்வது இதயத்துக்கு நல்லதல்ல, இதயம் மயக்கம் வரும் அளவுக்கு அங்கு தனக்கு பிரஷர் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
டெஸ்லா நிறுவனத்தில் உயர் பதவியில் பணிபுரியும் இரண்டு பெண்களின் ஸ்ரீலா வெங்கடரத்னம் ஒருவர் என்பதும் தற்போது அவரும் விலகிவிட்டதை எடுத்து ஒரே ஒரு பெண் மட்டுமே உயர் பதவியில் இருப்பதாக கூறப்படுகிறது.
டெஸ்லா நிறுவனத்தில் இருந்து சமீப காலமாக உயர் பதவியில் உள்ளோர் விலகி வருகின்றனர் என்பதும் ஏற்கனவே முக்கிய பதவியில் இருந்த ட்ரு பாக்லினோ என்பவர் சமீபத்தில் விலகினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.