ராஜஸ்தானில் இருந்து 150 இறைச்சி அட்டைப்பெட்டிகள் பெங்களூர் ரயில் நிலையம் வந்த நிலையில் அதை தடுத்து நிறுத்திய சமூக ஆர்வலர் ஒருவர் இது நாய்க்கறி என்றும் சட்டவிரோதமாக நாய்களைக் கொன்று கறிகளை விற்கிறார்கள் என்றும் குற்றம் சாட்டியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூரை சேர்ந்த இறைச்சி வியாபாரி ஒருவர் ராஜஸ்தானில் செம்மறி ஆட்டுக்கறி ஆர்டர் செய்த நிலையில் அந்த ஆர்டர் 150 அட்டைப் பெட்டிகளில் ரயில் மூலம் பெங்களூர் வந்தது. அப்போது அங்கு வந்த சமூக ஆர்வலர் ஒருவர் நாய் கறியை விற்பனை செய்கிறார்கள் என்றும் இது சட்டவிரோதமானது என்றும் விற்பனை செய்தவர் மீதும் வாங்குபவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது
இதனை அடுத்து அங்கு காவல்துறையினர் வருகை தந்த போது இறைச்சியை விற்பனை செய்தவரிடம் விசாரணை செய்யப்பட்டது. அப்போது அவர் அந்த அட்டைப்பெட்டிகள் அனைத்திலும் உள்ளது நாய் கறி அல்ல என்றும், செம்மறி ஆட்டுக்கறி தான் என்றும் இதை என்னால் நிரூபிக்க முடியும் என்றும் அதற்கான ஆவணங்கள் தன்னிடம் உள்ளதாகவும் கூறியதோடு சமூக ஆர்வலர் என்ற பெயரில் பணம் பறிக்கும் கூட்டத்தை சேர்ந்தவர் தான் புகார் அளித்தவர் என்று கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..
இது குறித்த விசாரணை பெங்களூர் ரயில் நிலையத்தில் நடந்து கொண்டிருந்த போது பொதுமக்கள் கூறி வேடிக்கை பார்த்தனர். அப்போது பார்சலில் இருந்தது செம்மறி ஆட்டுக்கறி தான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து சமூக ஆர்வலர் என்ற போர்வையில் இருக்கும் நபரை காவல்துறையினர் எச்சரிக்கை அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் சில மணி நேரம் பெங்களூர் ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.