X தனது AI Chatbot, Grok-ஐ டெலிகிராமுக்கு கொண்டு வந்துள்ளது. இனி, X-ஐ ஓப்பன் செய்யாமல் டெலிகிராமில் நேரடியாக Grok-உடன் உரையாடலாம். இமேஜ் பெறலாம்.
Grok-ஐ டெலிகிராமில் பயன்படுத்த இரண்டு நிபந்தனைகள் உண்டு. ஒன்று உங்களிடம் X Premium இருக்க வேண்டும். இரண்டாவது Telegram Premium இருக்க வேண்டும். இந்த இரண்டும் இருந்தால், டெலிகிராமி செயலியில் Grok-ஐ எளிதாக பயன்படுத்தலாம்.
Grok-ஐ டெலிகிராமில் எப்படி பயன்படுத்துவது?
முதலில் டெலிகிராமை அப்டேட் செய்யவும். புதிய பதிப்பை வைத்திருப்பதை உறுதிசெய்யுங்கள். இதையடுத்து டெலிகிராமில் Grok-ஐ சியர்ச் செய்யுங்கள். அதன்பின் X Premium மூலம் லாகின் செய்யுங்கள். அதற்கு உங்களது X கணக்கை உறுதிப்படுத்த தேவைப்படும். உங்கள் லாகினை உறுதிப்படுத்திய பிறகு, Grok-ஐ கேள்விகள் கேட்டு தகவல் பெறலாம்.
X, AI துறையில் மிகப்பெரிய முதலீடுகளைச் செய்து வருகிறது. Grok, Colossus AI Data Center-ல் இயங்குகிறது. இந்த நிலையில் டெலிகிராம் ஆதரவை இணைப்பதன் மூலம், மேலும் அதிக பயனர்களை அடையவும், உரையாடல்களை அதிகரிக்கவும் X திட்டமிடுகிறது.
டெலிகிராம் கருத்து சுதந்திரம் மற்றும் தன்னிச்சையான சமூகங்களுக்கு பிரபலமானது. இந்த மாற்றம் X-ன் பயனர் அடிப்படையோடு பொருந்துவதுடன், Grok-ன் பயன்பாட்டை அதிகரிக்கவும் உதவும்.
டெலிகிராமில் Grok இணைப்பு என்பது பெரிய வெற்றியாக மாறுமா அல்லது இன்னொரு AI முயற்சியாக முடிவடையுமா? என்பதை காலம் தான் தீர்மானிக்கும்.