மறைந்த முன்னாள் ஜனாதிபதியும், அணு விஞ்ஞானியுமான அப்துல் கலாம் மாணவர்களிடையே பேசிக் கொண்டிருக்கும் போதே மாரடைப்பால் மயங்கி விழுந்து இயற்கை எய்தினார். இதேபோல் ஒரு சம்பவம் தஞ்சை மாவட்டம் பட்டுக் கோட்டையில் நடந்துள்ளது. தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியராகப் பணியாற்றி வந்தவர் ஆசிரியர் செல்லத்துரை. இவருக்கு வயது 57. நேற்று முன்தினம் வழக்கம் போல் வகுப்பறையில் மாணவிகளுக்குப் பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.
அப்போது திடீரென அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு வகுப்பறையிலேயே மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவர் பட்டுக் கோட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.
ஒரே நேரத்தில் வெடித்த ஆயிரக்கணக்கான பேஜர்கள்.. 1000 தீவிரவாதிகள் உள்பட 2750 பேர் காயம்..!
மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிர் பிரிந்திருக்கலாம் என மருத்துவர்கள் கூறினர். மேலும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு ஆசிரியர் செல்லத்துரையின் உடல் அவரின் சொந்த ஊரான திருநெல்வேலி மாவட்டம் அச்சம்பட்டி கிராமத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
பாடம் நடத்திக் கொண்டிருக்கையிலேயே வகுப்பறையிலேயே ஆசிரியர் பரிதாபமாக உயிரிழந்தது மாணவிகள் மத்தியிலும், உடன் பணிபுரியும் ஆசிரியர்கள் மத்தியிலும் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியது. ஆசிரியரின் உடலுக்கு மாணவிகளும், பெற்றோர்களும், உடன் பணிபுரியும் ஆசிரியர்களும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். ஆசிரியரின் உடலைக் கண்ட மாணவிகள் கதறி அழுதனர்.
அப்துல் கலாமைப் போலவே பாடம் நடத்திக் கொண்டிருக்கையிலேயே மாணவிகள் மத்தியில் அவரின் உயிர் பிறந்திருக்கிறது.