15 நிமிடங்களில் டெலிவரி செய்யும் டாடா நியூ.. சென்னை உள்பட 15 நகரங்களில்..!

By Bala Siva

Published:

 

ஆன்லைன் இ-காமர்ஸ் நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ளவும், புதிய வாடிக்கையாளர்களை அதிகரிக்கவும் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகின்றன. குறிப்பாக, ஒவ்வொரு நிறுவனமும் போட்டி போட்டுக் கொண்டு மிகவும் குறைந்த காலத்தில் டெலிவரி செய்யும் முறையை கடைப்பிடித்து வருகின்றன.

அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் 10 முதல் 30 நிமிடங்களில் சில பொருட்களை டெலிவரி செய்ய முன் வந்துள்ள நிலையில், அதற்கு போட்டியாக தற்போது டாடா நியூ 15 நிமிடத்தில் முக்கிய பொருட்களை டெலிவரி செய்ய திட்டமிட்டுள்ளது. மளிகை மற்றும் காய்கறிகள், எலக்ட்ரானிக்ஸ், பேஷன் மற்றும் அழகு சாதன பொருட்களை ஒரு சில நகரங்களில் மட்டும் 15 நிமிடங்களில் டெலிவரி செய்ய இருப்பதாக டாடா நியூ கூறியுள்ளது.

‘நியூ பிளாஷ்’ என்ற தலைப்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த சேவை, பிக் பாஸ்கட் மூலம் வாங்கும் காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள், குரோமா மூலம் வாங்கப்ப்டும் எலக்ட்ரானிக் பொருட்கள் உள்பட பலவற்றை ஒரு சில பின் நம்பர்கள் உள்ள நகரங்களுக்கு 15 நிமிடங்களில் டெலிவரி செய்கிறது. குறிப்பாக, டெல்லி, மும்பை, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட 20 நகரங்களில் இந்த சேவையை தொடங்கி இருப்பதாக கூறப்படுகிறது. படிப்படியாக இந்த சேவையை மேலும் சில நகரங்களுக்கு அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளது.

டாட்டாவின் இந்த புதிய முயற்சிக்கு வாடிக்கையாளர்களின் வரவேற்பு கிடைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.