தமிழக வெற்றிக் கழகம்.. இந்த 3 வார்த்தைக்கு என்ன அர்த்தம் தெரியுமா? விஜய் விளக்கம்..!

By Bala Siva

Published:

நடிகர் விஜய் இன்று நடைபெற்ற மாநாட்டில் “தமிழக வெற்றி கழகம்” என்ற பெயரை தனது கட்சிக்கு ஏன் வைத்தேன் என்பதை விளக்கினார்.

வெற்றி என்ற சொல் ஒரு கூட்டத்தை உற்சாகத்துடன் நிறைக்க கூடிய மந்திரம். அந்த “வெற்றி” என்பதை எங்கள் கட்சியின் பெயரில் பயன்படுத்தினோம். முழுமையான வெற்றியை இலக்காகக் கொண்டு செயல்பட வேண்டும் என்ற மனப்பாங்கை உருவாக்குவதே எங்கள் நோக்கம்.

‘தமிழகம்’ என்பதோ தமிழர் வாழும் அடையாளம். புறநானூறு, சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற இலக்கியங்களில் “தமிழகம்” என்பதற்குப் பெருமைக்குரிய இடம் உண்டு. அதனால்தான் நாம் முதல் வார்த்தையாக தமிழகம் என்பதைத் தேர்ந்தெடுத்தோம். பேரறிஞர் அண்ணாவும் தமிழ்நாடு என்ற பெயரைக் கொண்டுவர உதவிய வார்த்தை தான் தமிழகம்.

‘கழகம்’ என்றால் நம் இளைஞர் சிங்கங்கள் படையின் தளம். உணர்ச்சியின் கலவை. கழகத்துடன் எங்கள் பயணத்தை ஆரம்பிக்கிறோம் என்பதற்காக மூன்றாவது வார்த்தையாக கழகம் என்பதையும் இணைத்தோம்.

மேலும், திருவள்ளுவரின் “பிறப்புக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற வாசகத்தை எங்கள் கொள்கையின் அடிப்படையாக எடுத்துள்ளோம். இதன்மூலம் தமிழ்நாட்டில் வாழும் மக்களின் வெற்றியை அடிப்படையாகக் கொண்டு, உலகத் தமிழர்களின் அடையாளமாக தமிழ்நாட்டை உயர்த்துவோம் என்ற உறுதியுடன் விஜய் பேசினார்.

Tags: TVK, vetri, vijay