சீமான், உதயநிதி முதல் விஜய் சேதுபதி வரை.. கட்சி வேறுபாடின்றி விஜய்க்கு குவியும் வாழ்த்து..

By John A

Published:

நடிகர் விஜய்யின் ஆரம்பித்துள்ள கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பமாக உள்ள நிலையில் தமிழகமே அவர் என்ன பேசப் போகிறார் என்பதை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறது. இந்திய சினிமாவின் உச்ச நடிகராக இருக்கும் போதே கட்சி ஆரம்பித்துள்ளதால் அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. இந்நிலையில் விஜய்க்கு அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

துணை முதலமைச்சர் ஸ்டாலின்
விஜய் எனது நீண்டகால நண்பர். அவருக்கு வாழ்த்துக்கள்.

விஜய் சேதுபதி

தவெக கட்சியின் முதல் மாநில மாநாடு சிறக்க, தவெக தலைவர் விஜய் சாருக்கும், தொண்டர்களுக்கும் வாழ்த்துக்கள் எனப் பதிவிட்டுள்ளார்.

சிவகார்த்திகேயன்
இன்று தனது புதிய பயணத்தைத் தொடங்கவிருக்கும் விஜய் சாருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

நடிகர் பிரபு
தம்பி.. விஜய் தைரியமாக அரசியல் களத்தில் நுழைந்துள்ளார். கடவுள் அவருடன் இருப்பார். அப்பாவின் ஆசீர்வாதமும், எங்கள் ஆசீர்வாதமும் அவருக்கு எப்போதும் உண்டு. அவர் சிறப்பாக வர வேண்டும்.

தவெக மாநாட்டில் நிறைவேற்றப் போகும் முக்கிய 19 தீர்மானங்கள்.. இதெல்லாம் லிஸ்ட்லயே இல்லையே..!

சீமான்
அரசியல் மாற்றமெனும் பெருங்கனவோடு ஆருயிர் இளவல் விஜய்யின் மாநாடு சிறக்க வாழ்த்துக்கள். தவெக கொள்கை பேரறிவிப்பு தமிழ்நாட்டு மண்ணுக்கும், மக்களுக்கும் நலன் பயக்கட்டும். தம்பி விஜய் அவர்களின் நம்பிக்கையும், நல்நோக்கமும் ஈடேறட்டும் என வாழ்த்தியிருக்கிறார் சீமான்.

ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர்
2014 தேர்தலில் மக்களவைத் நான் முதன் முறையாகப் போட்டியிட்ட போது விஜய்யின் அழைப்பும் வாழ்த்தும வந்தது. விஜய்யின் ரசிகர்கள் என்னுடன் தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்டனர். அந்த அன்போடும் நட்போடும் விஜய்யின் முதல் மாநில மாநாடு சிறக்க வாழ்த்துக்கள்.

நடிகர் சசிக்குமார்
உங்கள் வரவு எளிய மக்களுக்கான மிகப்பெரிய நம்பிக்கையாக அமையட்டும். நல்வாழ்த்துக்கள் விஜய்சார்.

நடிகை ரெஜினா
விஜய் சார் ஒரு வெற்றிகரமான நடிகர். அவர் வெற்றிகரமான அரசியல்வாதியாகவும் உருவெடுப்பார். அவருக்கு எனது வாழ்த்துக்கள்.

நடிகர் அர்ஜுன் தாஸ்

மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்த நடிகர் அர்ஜுன் தாஸ் Wishing you the very best Sir என வாழ்த்தியுள்ளார்.

இப்படி கட்சி வேறுபாடின்றி பல அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் விஜய்க்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர். இதனால் இந்திய அளவில் தமிழக வெற்றிக் கழகம் டிரெண்டிங் ஆகி உள்ளது.