பெயர் வெச்சதே கலைஞர் தான்.. வைரல் டெய்லர் அக்கா பற்றி பலருக்கும் தெரியாத பின்னணி..

முன்பு எல்லாம் ஒருவருக்கு திறமை இருந்தாலும் அவர்கள் மக்கள் மத்தியில் பிரபலம் அடைவது என்பதே மிக மிக கடினமான காரியமாக இருக்கும். எப்படிப்பட்ட திறமை வாய்ந்தவர்களாக அவர்கள் விளங்கினாலும் மக்கள் அனைவரின் மத்தியில் பெயர் எடுப்பதற்கு நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளும்.

ஆனால் தற்போது எல்லாம் சமூக வலைதளத்தின் வளர்ச்சியின் காரணமாக ஒரு சில வீடியோக்கள் அல்லது புகைப்படங்கள் மூலமே பலரும் எளிதாக வைரலாகி நல்ல பெயரையும் எடுத்து விடுகிறார்கள். காத்து கருப்பு கலை, அமலா ஷாஜி உள்ளிட்ட பலரை சுற்றி கூட எதிர்மறையான விமர்சனங்கள் இருந்தாலும் மக்கள் மத்தியில் அவர்களை பற்றி பரவலாக பேசியே வருகின்றனர்.

அந்த வகையில் அவர்களின் கண்டன்டு மற்றும் காமெடி உள்ளிட்ட விஷயங்கள் அமைவதால் நெகட்டிவ்வாக இருந்தாலும் கூட பிரபலமடைவதே பெரிய விஷயமாக பார்க்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமீப காலமாக சமூக வலைதளத்தின் மூலம் அதிக பிரபலமானவர் தான் தயாளு டிசைன்ஸ். புடவை, பிளவுஸ்கள் உள்ளிட்ட ஆடைகள் பலவற்றையும் இளம் பெண் ஒருவர் மிக நேர்த்தியாக வடிவமைத்து அது தொடர்பாக பல வீடியோக்களையும் இணையத்தில் பகிர்ந்து வருவதால் தற்போது மிக எளிதாகவும் மக்கள் மத்தியில் சென்றடைந்து விட்டார்.

அவர் பெயர் தயாளு என்பது தெரியும் என்பதை விட டெய்லர் அக்கா என்று தான் பலரும் அவரை சமூக வலைத்தளங்களில் குறிப்பிட்டு வருகின்றனர். இன்று சமூக வலைத்தளத்தை திறந்தாலே தயாளு டிசைன்ஸ் அல்லது டைலர் அக்கா என்பது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் தான் பெரிய அளவில் இணையத்தை ஆக்கிரமித்து வருகிறது.

அப்படி ஒரு சூழலில் இந்த தயாளு டிசைன்ஸ் இளம் பெண்ணின் பின்னணி குறித்து தற்போது சில சுவாரசியமான தகவல்களை பார்க்கலாம். தயாளு டிசைன்ஸ் என்ற பெயர் காரணத்தை பற்றி அந்த இளம்பெண் குறிப்பிடுகையில் கருணாநிதி தான் தனக்கு தயாளு என்ற பெயர் வைத்ததாகவும் தனது அக்காவுக்கும் அஞ்சுதம் என்ற பெயரை கலைஞரே வைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதில் தயாளு என்பது கலைஞரின் மனைவியுடைய பெயர். அதே போல அஞ்சுதம் என்பது அவருடைய தாயாரின் பெயர். இதன் பின்னணியால் தான் தயாளு டிசைன் என்ற பெயர் உருவானதாக அவர் தெரிவித்துள்ளார். அதே போல தயாளுவின் தந்தையும் திமுக கட்சியில் இருந்து கவுன்சிலராகவும் இருந்தவர் என்பது கூடுதல் கவனிக்கத்தக்க விஷயம்.

இவரது திருமணம் உள்ளிட்ட வைபவங்களில் கூட கலைஞர் கருணாநிதி கலந்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கும் நிலையில் திமுகவின் அடிப்படையில் தயாளு டிசைன்ஸ் பெயர் உருவாகியுள்ள காரணம் பலருக்கும் தெரியாத தகவல் தான்.