ஊர்க்காவல் படையினருக்கு வெளிவந்த முக்கிய அறிவிப்பு.. அரசாணை வெளியீடு

By John A

Published:

இந்தியா முழுவதும் காவல் துறைக்கு துணைபுரியும் விதமாக ஊர்க்காவல் படை உருவாக்கப்பட்டது. 1962-ல் நிறுவப்பட்ட இந்த தன்னார்வப் படை தற்போது இந்தியா முழுக்க சுமார் 25 மாநிலங்களில் செயல்பட்டு வருகிறது. இதில் தன்னார்வலர்களாக 6 இலட்சம் பேர் பணிபுரிகின்றனர்.

காவல் துறையினரைப் போலவே இவர்களுக்கும் தனிச் சீருடை போன்றவை வழங்கப்படுகிறது. காவல் துறையில் பணிபுரிய விருப்பமுடையவர்கள் அதற்கான ஆசை நிறைவேறாத போது ஊர்க்காவல் படையில் சேர்ந்து காவல்துறையினருக்கு உறுதுணையாக இருக்கின்றனர். தமிழ்நாட்டில் ஊர்க்காவல் படை 1963-ல் துவக்கப்பட்டது. 18 முதல் 45 வயது வரை உள்ள ஆண், பெண் இருபாலரும் ஊர்க்காவல் படையில் பணிபுரிந்து வருகின்றனர்.

500 ரூபாய்க்கு வாங்குன மார்பிள் சிலை.. இப்ப மதிப்பு 27 கோடியா.. ஒரே நாளில் உடைந்த 300 வருட மர்மம்..

உள்ளுர் திருவிழாக்கள், மாநாடுகள், கூட்டங்கள் போன்றவற்றில் ஊர்க்காவல் படையினர் பங்கு அதிகம். மேலும் இவர்களுக்கு நாள்தோறும் குறிப்பிட்ட அளவில் ஊதியம் வழங்கப்படுகிறது. மேலும் மாதத்தில் குறிப்பிட்ட நாட்கள் பணியும் கிடைப்பதால் இளைஞர்கள் பலர் ஊர்க்காவல் படையில் இணைந்து சேவை செய்கின்றனர். ஆனால் காவல் துறையினரைப் போல் சலுகைகள் கிடையாது. இந்நிலையில் ஊர்க்காவல் படையினருக்கு தமிழக அரசு தற்போது முக்கிய அறிவிப்பினை வெளியிட்டிருக்கிறது.

அதன்படி, ஊர்க்காவல் படையினர் பணியின் போது மரணம் அடைய நேரிட்டால் அவர்களின் குடும்பத்திற்கு இதுவரை வழங்கப்பட்டுவந்த இழப்பீட்டுத் தொகை 15 ஆயிரத்தில் இருந்து 1 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் காயமடைந்தால் வழங்கப்படும் உதவித்தொகை 10 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. சட்டமன்றத்தில் கூறிய முதல்வரின் அறிவிப்பு தற்போது அரசாணையாக வெளியிடப்பட்டுள்ளது.