மாணவர்களே.. தமிழக அரசின் மாதம் ரூ.1000 உதவித் தொகை வேணுமா? அப்போ இதெல்லாம் ரெடியா வச்சுக்கோங்க..!

By John A

Published:

சென்னை : முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்றபின் கல்விக்கு அதிக முக்கியத்துவம் தரும் திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது. காமராசர், எம்.ஜி.ஆரைப் போல் மதிய உணவு, சத்துணவுத் திட்டங்களுடன் 1முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் பள்ளிச் சிறாற்களுக்கு பள்ளியிலேயே காலை உணவு வழங்கும் திட்டத்தினை முதல்வர் ஸ்டாலின் அறிமுகப்படுத்தி அதனை வெற்றிகரமான திட்டமாக மாற்றினார்.

இதற்கு அடுத்ததாக தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளியில் 6முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று அரசுக் கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தினையும் செயல்படுத்தி வருகிறது திமுக அரசு. இவ்விருதிட்டங்களும் மற்ற மாநிலங்களுக்கும் முன்னுதாரணமாகத் திகழ்ந்த நிலையில் தற்போது மாணவர்களுக்கும் ரூ.1000 வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு வந்த சூப்பர் அறிவிப்பு.. தமிழக அரசு சொன்ன குட் நியூஸ்…

உயர்கல்வி செல்லும் அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கும் தமிழ்ப்புதல்வன் திட்டப் பணிகளை தமிழக அரசு தொடங்கியுள்ளது. இதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் இத்திட்டத்திற்கு முக்கிய ஆவணமாக ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

எனவே ஆதார் எண் இதுவரை பதிவு செய்யாத மாணவர்கள் ஆதார் எண் பதிவு செய்யுமாறும், மேலும் சம்பந்தப்பட்ட பள்ளிகள் ஆதார் முகாம்களை நடத்தி மாணவர்களுக்கு ஆதார் எண் பெறும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் வங்கிக் கணக்கு எண் போன்றவையும் வைத்திருக்க வேண்டும். மேற்கண்ட ஆவணங்கள் தயாராக இருக்கும் பட்சத்தில் விரைவில் இதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட உள்ளது. மேலும் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு தகுதி வாய்ந்த மாணவர்களுக்கு ரூ.1000 வழங்கப்பட உள்ளது. மாணவிகளைப் போலவே மாணவர்களுக்கும் இனி 1000 ரூபாய் கிடைக்கப் பெறுவதால் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களும், பெற்றோர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.