யாரோ சிலருக்கு வேண்டுமானால் அம்பேத்கர் பெயர் ஒவ்வாமையாக இருக்கலாம்.. அமித்ஷாவுக்கு விஜய் கண்டனம்

சென்னை: யாரோ சிலருக்கு வேண்டுமானால் அம்பேத்கர் பெயர் ஒவ்வாமையாக இருக்கலாம். சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் இந்திய மக்கள் அனைவருக்கும் அவர்கள் உயரத்தில் வைத்துப் போற்றும் ஒப்பற்ற அரசியல் மற்றும் அறிவுலக ஆளுமை, அவர். அம்பேத்கர்…அம்பேத்கர்……

Tamil Nadu Vetri Kazhagam leader Vijay condemns Amit Shah for speaking about Ambedkar

சென்னை: யாரோ சிலருக்கு வேண்டுமானால் அம்பேத்கர் பெயர் ஒவ்வாமையாக இருக்கலாம். சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் இந்திய மக்கள் அனைவருக்கும் அவர்கள் உயரத்தில் வைத்துப் போற்றும் ஒப்பற்ற அரசியல் மற்றும் அறிவுலக ஆளுமை, அவர். அம்பேத்கர்…அம்பேத்கர்… அம்பேத்கர்…அவர் பெயரை உள்ளமும் உதடுகளும் மகிழ உச்சரித்துக்கொண்டே இருப்போம் என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், அமித்ஷாவை கண்டித்துள்ளார்.

அரசியலமைப்பு சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டதன் 75 ஆவது ஆண்டை முன்னிட்டு மாநிலங்களவையில் நேற்று இரண்டாவது நாளாக அரசியலமைப்பு சட்டம் குறித்த விவாதம் நடந்தது. இதற்கு பதில் அளித்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “அம்பேத்கர், அம்பேத்கர் என்று கூறுவது ஒரு பாணியாக மாறி விட்டது. கடவுளின் பெயரை அவர்கள்(எதிர்க்கட்சியினர்) பல முறை கூறினால், அவர்களுக்கு சொர்க்கத்திலாவது இடம் கிடைத்திருக்கும்,”என்று கூறினார்.

இதையடுத்து அமித்ஷா அம்பேத்கரை அவமதித்து விட்டதாக நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் இன்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டன. மேலும், நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

தாழ்த்தப்பட்டோரின் அடையாளமாகத் திகழும் பி.ஆர்.அம்பேத்கரை அவமதித்ததற்காக மத்திய அமைச்சர் அமித்ஷா மனிப்புக் கேட்பதுடன், பதவியையும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்க்கே வலியுறுத்தியுள்ளார். உள்துறை அமைச்சர் அமித்ஷாவை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் பிரதமர் மோடிக்கு கெடு விதித்து போராட்டத்தை அறிவித்துள்ளன.

இந்த விவாகரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துவருகிறார்கள். தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டிருந்த பதிவில், அதிக பாவங்கள் செய்பவர்கள்தான் புண்ணியத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டும். நாட்டைப் பற்றியும் மக்களைப் பற்றியும் அரசியல்சட்டத்தின் பாதுகாப்பு பற்றியும் கவலைப்படுவோர் புரட்சியாளர் அம்பேத்கர் பெயரைத்தான் சொல்வார்கள்! சொல்ல வேண்டும்! என்று கூறினார்.

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறுகையில், “எதெற்கெடுத்தாலும் அம்பேத்கர்.. அம்பேத்கர்.. என்று சொல்கிறார்கள்” என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவதூறாக பேசியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம்.

எப்படி எங்கே செல்லலாம் என டூரிஸ்ட் கைடு வேலை பார்ப்பதற்கு பதிலாக, உள்துறை அமைச்சர் பொறுப்பை அமித்ஷா முதலில் சரிவர கவனிக்கட்டும். அண்ணல் அம்பேத்கர் தந்த அரசியலமைப்பு சட்டத்தை எப்படியாவது சிதைக்கலாம் என்று கங்கணம் கட்டி அலையும் பாசிஸ்ட்டுகளுக்கு, அம்பேத்கரின் பெயரைக் கேட்டாலே எரிச்சல் வருகிறது என்றால், இன்னும் பல நூறுமுறை அண்ணலின் பெயரை குரல் உயர்த்திச் சொல்வோம்! வாழ்க அம்பேத்கர்! அம்பேத்கர் புகழ் ஓங்கட்டும்!” என்று கூறியுள்ளார்.

நடிகரும் தமிழக வெற்றிக்கழகத் தலைவருமான விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறுகையில், “யாரோ சிலருக்கு வேண்டுமானால் அம்பேத்கர் பெயர் ஒவ்வாமையாக இருக்கலாம். சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் இந்திய மக்கள் அனைவருக்கும் அவர்கள் உயரத்தில் வைத்துப் போற்றும் ஒப்பற்ற அரசியல் மற்றும் அறிவுலக ஆளுமை, அவர். அம்பேத்கர்…அம்பேத்கர்… அம்பேத்கர்…அவர் பெயரை உள்ளமும் உதடுகளும் மகிழ உச்சரித்துக்கொண்டே இருப்போம். எங்கள் கொள்கைத் தலைவரை அவமதிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அண்ணலை அவமதித்த ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சரை, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.