ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவினை அடுத்து இன்று அவர் சட்டமன்ற உறுப்பினராகப் பதவி வகித்த தொகுதியான ஈரோடு கிழக்குத் தொகுதி காலியானதாக தமிழக சட்டப்பேரவை செயலகத்தால் அறிவிக்கப்பட்டு இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
முன்னதாக கடந்த 2021- சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீட்டில் ஈரோடு கிழக்குத் தொகுதியானது காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகனான ஈவேரா திருமகன் போட்டியிட்டு முதன் முறையாக சட்டப்பேரவையில் அடியெடுத்து வைத்தார்.
தந்தையை இழந்த 111 பெண்களுக்கு திருமணம் செய்து வைத்த வைர வியாபாரி.. நெகிழ்ச்சியான குஜராத்
இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் மாரடைப்பு காரணமாக ஈவேரா திருமகன் உயிரிழக்க அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் வேண்டுகோளுக்கிணங்க ஈவிகேஎஸ் இளங்கோவன் இடைத்தேர்தலில் போட்டியிட்டார். இத்தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக சட்டமன்றத்தில் நுழைந்தார்.
ஆனால் துரதர்ஷ்டவசமாக கடந்த 14-ம் தேதி ஈவிகேஎஸ் இளங்கோவனும் மூச்சுத் திணறல் காரணமாக உயிரிழக்க வரலாற்றில் முதன் முறையாக ஒரே தொகுதிக்கு இரண்டு முறை இடைத்தேர்தல் நடைபெறும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதன்படி இன்று தமிழக சட்டப்பேரவை செயலகம் ஈரோடு கிழக்குத் தொகுதி காலியானதாக அறிவித்து இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைத்தது.
வருகிற ஜனவரியில் டெல்லி சட்டமன்றத் தேர்தல் அல்லது பிப்ரவரியில் ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு மீண்டும் இடைத்தேர்தல் நடைபெறலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.