கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் ஒரு பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்த போது, டாக்டர் அலட்சியமாக பெண்ணின் வயிற்றுக்குள் சர்ஜிகல் துணியை வைத்து தைத்ததாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் மங்களூரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில், கர்ப்பிணி பெண் ஒருவருக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது. அதன் பின்னர், அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. இதையடுத்து, அந்த பெண் மீண்டும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
மருத்துவர்கள் சிடி ஸ்கேன் எடுக்க பரிந்துரைத்தனர். சிடி ஸ்கேனில், பெண்ணின் வயிற்றில் 7 சென்டிமீட்டர் அளவுக்கு அறுவை சிகிச்சை துணி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து, பிரசவம் பார்த்த மருத்துவர் பொறுப்பு ஏற்க மறுத்துவிட்டார்.
இதையடுத்து அந்த பெண்ணுக்கு வேறொரு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து அந்த துணி அகற்றப்பட்டது. இது குறித்து, பெண்ணின் கணவர் தேசிய நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகார் குறித்து அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.