ரஜினி சொன்ன ஒற்றை பதிலால் ஆடிப்போன ரசிகர்கள்.. நாட்டு நடப்பு உண்மையிலேயே தெரியாதா என வேதனை?

சூப்பர் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான வேட்டையன் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்ற போதிலும் ஜெயிலர் அளவிற்கு மெகா ஹிட் கொடுக்கவில்லை. இருப்பினும் தற்போது அடுத்த படத்திற்கான பணிகளில் மூழ்கிவிட்டார் ரஜினிகாந்த். தற்போது லோகேஷ்…

Rajini

சூப்பர் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான வேட்டையன் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்ற போதிலும் ஜெயிலர் அளவிற்கு மெகா ஹிட் கொடுக்கவில்லை. இருப்பினும் தற்போது அடுத்த படத்திற்கான பணிகளில் மூழ்கிவிட்டார் ரஜினிகாந்த். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார். இதற்கான படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஷுட்டிங்கிற்காக வெளியூர் சென்ற ரஜினிகாந்த் சென்னை விமான நிலையம் வந்தார்.

அப்போது அவரைச் சூழ்ந்து கொண்ட செய்தியாளர்கள் மற்றும் ரசிகர்கள் அவருக்கு டிசம்பர் 12 பிறந்த நாளையொட்டி வாழ்த்துத் தெரிவித்தனர். இதற்கு அடுத்ததாக ரஜினி சொன்ன பதிலால் அவரது ரசிகர்கள் உள்ளிட்ட அனைவரும் ரஜினிக்கு நாட்பு நடப்பு தெரியாதா என விமர்சித்து வருகின்றனர். அண்மையில் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட வட மாவட்டங்களில் கன மழை வெளுத்த திருவண்ணாமலை தீபமலையில் மண்சரிவு ஏற்பட்டு 7 பேர் உயிரிழந்தனர்.

இச்சம்பவம் தமிழகம் முழுக்க சோகத்தினை ஏற்படுத்தியது. திருவண்ணாமலை மண்சரிவு உயிரிழப்பு குறித்து நடிகர் ரஜினிகாந்திடம் செய்தியாளர் கேள்வி கேட்கையில் எப்போது என்று கேட்டார்? அதன்பின் ஓ மை காட்.. ஸாரி என்று வருத்தம் தெரிவித்தார். இதனால் அருகிலிருந்தவர்கள் ஷாக் ஆகினர்.

மனைவியை பிரிந்ததால் இசைக்கு ஓய்வு கொடுக்கிறாரா ஏஆர் ரஹ்மான்? மகன், மகள் ரியாக்சன் என்ன?

இந்நிலையில் ரஜினிகாந்தின் இந்தப் பேட்டி வைரலாகி வருகிறது. சாதாரண காமெடி நடிருக்கு இருக்கும் இரக்கம் கூட ரஜினிக்கு இல்லையே என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். மேலும் ரஜினி பேசுகையில், கூலி படம் முடிந்த பின்னர் தான் அடுத்த படத்திற்கான பணிகள் ஆரம்பமாகும் எனவும் தெரிவித்தார். தமிழ்நாட்டில் ஒரு பெரிய இயற்கைப் பேரிடர் நடந்து இதனால் சில உயிர்கள் பலியானது கூடவா இவருக்குத் தெரியவில்லை என கமெண்டுகளைப் பதிவிட்டு வருகின்றனர்.