இளம்பெண் ஒருவர் ஏற்கனவே ஒரு குழந்தை உள்ள நிலையில் இரண்டாவது குழந்தைக்காக முயற்சித்தபோது, இரண்டு முறை கரு கலைந்துவிட்டது. அதன் பிறகு, சுகருக்காக சிகிச்சை பெற்றதினால், அந்தப் பெண்ணுக்கு இரண்டாவது குழந்தை பிறந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது, இதனால் அவர் ஆச்சரியத்தில் அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
இளம்பெண் ஒருவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை இருப்பதனால், இரண்டாவது குழந்தையை பெற விரும்பினார். ஆனால், இரண்டு முறை கரு உருவாகி பின்னர் கரு கலைந்துவிட்டது. இந்த நிலையில் தான் அவருக்கு சுகர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதற்காக அவர் ஒரு தகுந்த மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெற்றார். மருத்துவரின் அறிவுரைப்படி, மாவுச்சத்து உணவுகளை குறைத்து, மருத்துவரால் வழங்கப்பட்ட உணவுக் கட்டுப்பாட்டை கடைப்பிடித்தார். தினமும் ஒரு மணி நேரம் நடைப்பயிற்சி மேற்கொண்டு, மருந்துகளை தவறாமல் எடுத்தார். இதனால் சில மாதங்களில் மீண்டும் கரு உருவானது.
இதுகுறித்து அவர் மருத்துவரிடம் கேட்டபோது, சுகருக்கு சிகிச்சை எடுத்ததாலேயே பிசிஓடி நோயும் குணமாகிவிட்டது என மருத்துவர் தெரிவித்தார். ரத்தத்தில் சர்க்கரை அதிகமாக இருப்பதால் கரு உருவாகாமல் இருந்தது; அதனால் இரண்டு முறை கரு கலைந்தது. சுகருக்கும் பிசிஓடிக்கும் ஒரே காரணம் என்பதால், சுகருக்கு சிகிச்சை எடுத்ததினால் பிசிஓடி பிரச்சனையும் சரியாகி, கர்ப்பம் கிடைத்தது என்று மருத்துவர் கூறினார். குழந்தையை பெற்றெடுக்க தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
எனவே, கரு அடிக்கடி கலைந்தால், பிசிஓடி பரிசோதனை செய்து, மருத்துவர் அறிவுறுத்திய மாத்திரைகளை சாப்பிட்டால், அந்நோய் குணமாகும் என்பது தெரிகிறது.