வெற்றிகரமாக விண்ணில் நிலவை நோக்கி பாய்ந்த சந்திராயன் – 3!

By Sowmiya

Published:

பூமியில் இருந்து நிலவுக்கு செல்ல சந்திராயன் – 3 விண்கலம் எல்.வி.எம் – 3 எம் – 4 எனும் ராக்கெட் வெற்றிகரமாக விண்ணை நோக்கி இன்று (14/7/2023) மதியம் 02: 35 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது.

ஆந்திர பிரதேச மாநிலத்தின் ஸ்ரீஹரிஹோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இந்த சந்திராயன் – 3ஐ சுமந்த ராக்கெட் விண்ணில் அனுப்பப்பட்டது.

chandraya 3 1

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ ரூபாய் 615 கோடியில் இந்த சந்திராயன் – 3 விண்கல திட்டத்தை வடிவமைத்து செயல்படுத்தி உள்ளது. 40 நாட்கள் பயணத்திற்குப் பிறகு ஆகஸ்ட் மாதம் 23 ஆம் தேதி மின்கலத்தை தரையில் இறக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டு உள்ளனர் ‌‌‌‌‌என இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.  இந்த விண்கலத்தை இஸ்ரோ விஞ்ஞானிகள் பெங்களூரு உட்பட உலகெங்கும் உள்ள தங்களின் கட்டுப்பாட்டு அறையில் இருந்து தொடர்ந்து கண்காணித்து வருவார்கள்.

சந்திராயன் – 3 விண்கல திட்டத்தின் திட்ட இயக்குனர்  வீரமுத்துவேல் அவர்கள் தமிழகத்தின் விழுப்புரம் பகுதியை சேர்ந்தவர். முனைவர் பட்டம் பெற்ற இவர் சென்னை ஐஐடியின் முன்னாள் மாணவர் ஆவார்.‌ சந்திராயன் – 3 மட்டும் இன்றி சந்திராயன் 1ன் திட்ட இயக்குனராக இருந்த மயில்சாமி அண்ணாதுரை அவர்களும் சந்திராயன் இரண்டின் திட்ட இயக்குனராக இருந்த வனிதா அவர்களும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது பெருமைக்குரிய விஷயமாகும். இஸ்ரோ வரலாற்றிலேயே வனிதா அவர்கள் தான் முதல் பெண் திட்ட இயக்குனராக பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

chandrayan 3 launch 1

சந்திராயன் 3 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதற்காக பிரதமர், குடியரசுத் தலைவர், பல அரசியல் கட்சி தலைவர்கள், பிரமுகர்கள் என பலரும் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளார்கள்.

சந்திராயன் – 1 நிலவின் மேற்பரப்பில் தண்ணீர் இருப்பதை உலகுக்கு தெரியப்படுத்தியதைப் போல சந்திராயன் – 3ம் நிலவைப் பற்றிய பல புதிய தகவல்களை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.