நாளை முதல் 10,11,12 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடக்கம்.. அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய அறிவிப்பு..!

  நாளை முதல் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்க இருக்கும் நிலையில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் நாளை, அதாவது…

images 2 6 1

 

நாளை முதல் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்க இருக்கும் நிலையில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் நாளை, அதாவது மார்ச் 3ஆம் தேதி முதல் 12 ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு தொடங்க உள்ளது. அதேபோல், மார்ச் 5ஆம் தேதி முதல் 11ஆம் வகுப்பிற்கும், மார்ச் 28ஆம் தேதி முதல் 10ஆம் வகுப்பிற்கும் பொதுத்தேர்வு நடைபெற உள்ளன.

நாளை 12ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு தொடங்க இருப்பதை அடுத்து, அனைத்து பள்ளிகளிலும் தேர்வை நடத்த போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு ஏற்கனவே ஹால் டிக்கெட் உட்பட அனைத்து ஆவணங்களும் வழங்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.

இந்த நிலையில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் 10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தங்களுக்கு ஏதேனும் பிரச்சனை இருந்தால், அது குறித்து புகார்கள் தெரிவிக்கலாம் என்றும் அதற்கான உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.

இதன்படி, 9498383075, 9498383076 என்ற இரண்டு உதவி எண்களை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தொடர்பு கொண்டு, தேர்வு குறித்து ஏதேனும் பிரச்சனை இருந்தால் புகார் அளிக்கலாம்.  புகார்கள் மட்டுமின்றி தேர்வை சிறப்பாக நடத்துவதற்கான கருத்துக்களையும், ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், தேர்வு கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவித்து பயன்பெறலாம் எனவும் அமைச்சர் அன்பில் மகேஷ்  தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தங்களுக்கு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால், மேற்கண்ட உதவி எண்களில் புகார் தெரிவிக்கலாம். மேலும், தங்களுடைய மேலான கருத்துக்களையும் தெரிவிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.