மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம் வாபஸா? தொடர்கிறதா? மாறி மாறி வரும் செய்திகளால் பரபரப்பு..!

கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக மல்யுத்த வீராங்கனைகள் தங்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய பாஜக எம்பி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் மிகப்பெரிய அளவில் நடந்தது என்பதும் குறிப்பாக புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவின் போது உச்சத்தை அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்திற்கு பல அரசியல் கட்சிகள் ஆதரவளித்தன என்பதும் சமூக வலைதளங்களிலும் ஆதரவு குவிந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டும் இன்றி சக விளையாட்டு வீரர்களும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வந்தனர்

இந்த நிலையில் போராட்டம் செய்த மல்யுத்த வீராங்கனைகள் மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய போது சில சலுகைகள் மல்யுத்த வீராங்கனைகளுக்கு அளிப்பதாக உறுதி செய்யப்பட்டதாகவும் இந்திய மல்யுத்த சம்மேளனம் வீராங்கனைகளின் குற்றச்சாட்டு குறித்து விசாரணை செய்ய ஒப்புக்கொண்டதாகவும் கூறப்பட்டது.
இதனை அடுத்து போராட்ட வீராங்கனைகளில் ஒருவரான சாக்ஷி மாலிக் மற்றும் பஜ்ரங் புனியா ஆகிய இருவரும் போராட்டத்தை வாபஸ் பெறுவதாகவும் தாங்கள் ஏற்கனவே ராஜினாமா செய்த பணிகளில் மீண்டும் சேர இருப்பதாகவும் அறிவித்தனர். இந்த நிலையில் திடீரென மீண்டும் தாங்கள் போராட்டத்தை நிறுத்தவில்லை என்றும் தாங்கள் தங்களுடைய பணிகளை தொடர்ந்தாலும் நீதிக்கான போராட்டம் தொடரும் என்றும் கூறியுள்ளனர்.

போராட்டம் வாபஸ் பெற்றதாக ஒரு பக்கத்தில் செய்திகளும் இன்னொரு பக்கம் போராட்டம் தொடர்வதாக செய்திகளும் வெளிவந்து கொண்டிருப்பதால் குழப்பம்தான் ஏற்பட்டுள்ளது. மல்யுத்த வீராங்கனைகளுக்கு சில வசதிகளை செய்து கொடுப்பதாக உறுதி அளித்துள்ளதாகவும் அதுமட்டுமின்றி மல்யுத்த வீராங்கனைகளுக்கான பரிசு தொகையை உயர்த்தி சர்வதேச போட்டிகளுக்கு அதிக மல்யுத்த வீரர்கள் மற்றும் வீராங்கனை அனுப்ப ஒப்பு கொண்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் அறிவித்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் கோரிக்கை அனைத்தையும் நிறைவேற்றுவதில் உறுதியாக இருப்பதாக மல்யுத்த சம்மேளம் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து போராட்டம் வாபஸ் பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews