கோதுமை மாவில் கருங்கல் பவுடர் கலப்படம்.. உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிர்ச்சி..!

By Bala Siva

Published:

உத்தரபிரதேச மாநிலத்தில் கோதுமை தயாரிக்கும் நிறுவனம் ஒன்று கோதுமையுடன் கருங்கல் பவுடரை கலப்படம் செய்து விற்பனை செய்து வந்ததாக உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கண்டுபிடித்து உள்ளதை அடுத்து பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

கோதுமை உணவு என்பது சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் உணவு என்பதும் குறிப்பாக வட மாநிலத்தில் கோதுமையை அதிகம் பயன்படுத்துவார்கள் என்பதும் தெரிந்தது.

சர்க்கரை நோயாளிகள் உள்பட அனைவருக்கும் பாதுகாப்பான உணவு கோதுமை என்று நம்பப்பட்டு வரும் நிலையில் இந்த கோதுமையில் கூட கலப்படம் செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசம் மாநிலத்தில் லோக்கல் பிராண்ட் கோதுமை மாவு விற்பனை செய்யும் நிறுவனத்தில் திடீரென அம்மாநில உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது கோதுமை மாவில் கருங்கல் பவுடர் கலக்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த கருங்கல் பவுடரை கோதுமையுடன் சேர்த்து சாப்பிடும் பொது மக்களுக்கு உடல் நல பிரச்சனை வரும் என்று என்பதை அடுத்து அந்த கோதுமை மாவு நிறுவனம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அந்த கோதுமை மாவு நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் நிறுவன உரிமையாளர்களிடம் விசாரணை செய்து வருவதாகவும் கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல் கல் நெஞ்சோடு இந்த கருங்கல் பவுடரை கலந்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.