இலங்கை, பங்களாதேஷ், நேபாளம்.. இந்தியாவை சுற்றி நடக்கும் போராட்டங்களுக்கு அமெரிக்கா காரணமா? நாளை இந்தியாவிலும் நடக்கலாம்? இந்தியாவை ரவுண்டு கட்டுகிறதா அமெரிக்கா? மோடியின் ராஜதந்திரம் என்னவாக இருக்கும்?

நேபாளம் ஒரு பெரும் அரசியல் கொந்தளிப்பை சந்தித்து வருகிறது. சமீபத்தில், இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் நடத்திய தொடர் போராட்டங்களால், பிரதமர் கே.பி. ஷர்மா ஒலியும், குடியரசு தலைவரும் பதவியை ராஜினாமா செய்தனர். இந்த நிகழ்வுகள்,…

protest

நேபாளம் ஒரு பெரும் அரசியல் கொந்தளிப்பை சந்தித்து வருகிறது. சமீபத்தில், இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் நடத்திய தொடர் போராட்டங்களால், பிரதமர் கே.பி. ஷர்மா ஒலியும், குடியரசு தலைவரும் பதவியை ராஜினாமா செய்தனர். இந்த நிகழ்வுகள், ஒரு முன்னாள் பிரதமரின் மனைவி உயிருடன் எரிக்கப்பட்டது, அமைச்சர்கள் தெருக்களில் விரட்டி விரட்டி தாக்கப்பட்டது என பல வவலான வன்முறை சம்பவங்களை உள்ளடக்கியுள்ளன. நாட்டின் சட்டம் ஒழுங்கு முழுமையாக சீர்குலைந்துள்ளது.

போராட்டங்கள் தீவிரமடைந்தபோது, பிரதமர் கே.பி. ஓலி, ராணுவ தளபதியை தொடர்புகொண்டு தன்னை காப்பாற்றி, துபாய்க்கு விமானத்தில் அனுப்பி வைக்குமாறு கோரியுள்ளார். ஆனால், ராணுவத் தளபதி, “நீங்கள் பதவியை ராஜினாமா செய்தால் மட்டுமே நிலைமையை கட்டுப்படுத்த முடியும்” என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். வேறு வழியின்றி ஓலி ராஜினாமா செய்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், “அரசியல் தீர்வை காண பேச்சுவார்த்தை நடத்துவோம், நாட்டின் இறையாண்மை முக்கியம்” என்று கூறியுள்ளார்.

நேபாளத்தில் நடக்கும் நிகழ்வுகள், சமீபத்தில் பங்களாதேஷில் நடந்த அரசியல் மாற்றங்களை ஒத்திருக்கின்றன. இரு நாடுகளிலும் காணப்படும் சில முக்கிய ஒற்றுமைகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

ஊழல் மற்றும் வாரிசு அரசியல்: பங்களாதேஷில் அரசு பதவிகளில் கோட்டா முறையும், நேபாளத்தில் அரசியல்வாதிகளின் வாரிசுகள் அரசு பதவிகளை பெறுவதும் முக்கிய போராட்ட காரணங்களாக அமைந்தன.

வெளிநாட்டுத் தூதர்களின் சந்திப்புகள்: இரு நாடுகளிலும் அமெரிக்கத் தூதர்கள், போராட்டங்களை முன்னெடுத்த மாணவர் தலைவர்களையும், உள்ளூர் அரசியல் தலைவர்களையும் சந்தித்துள்ளனர்.

அரசின் சமூக ஊடக தடை: போராட்டங்கள் தீவிரமடைந்த நிலையில், இரு நாடுகளின் அரசுகளும் சமூக ஊடகங்களுக்கு தடை விதித்தன. ஆனால், இது போராட்டக்காரர்களின் கோபத்தை மேலும் அதிகரித்தது.

ராணுவத்தின் நிலைப்பாடு: இரு நாடுகளிலும், ராணுவம் அரசாங்கத்திற்கு முழு ஆதரவு அளிக்காமல், நடுநிலை வகித்தது. இது, தலைவர்கள் பதவியில் இருந்து விலகுவதற்கு காரணமாக அமைந்தது.

இந்த நிகழ்வுகள் ஒரு சாதாரண அரசியல் மாற்றம் அல்ல, மாறாகப் அரசியல் உத்திகளின் ஒரு பகுதியாகவே பார்க்கப்படுகின்றன. சீனாவை சுற்றி அமைந்துள்ள நாடுகளில் அமெரிக்கா தனது செல்வாக்கை பெருக்கிக்கொள்ள முயற்சிக்கிறது. குறிப்பாக, நேபாளம், இலங்கை, பங்களாதேஷ், பூட்டான் போன்ற நாடுகள் சீனாவின் ஆதரவு பெற்ற ஆட்சிகளை கொண்டிருந்தன. இந்த ஆட்சிகளை மாற்றுவதன் மூலம், அமெரிக்கா தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்த முயற்சி செய்வதாக கூறப்படுகிறது.

இந்தியாவிற்கு இது ஒரு பெரிய சவாலாக உள்ளது. ஒருபுறம் சீனாவுக்கு ஆதரவான அரசாங்கங்கள் வீழ்ச்சியடைந்தாலும், மறுபுறம் இந்தியாவிற்கு நெருக்கமான அண்டை நாடுகளில் நிலையற்ற தன்மை ஏற்படுவது நல்லதல்ல. மோடி அரசு இந்த பிரச்சினையை கவனத்துடன் கையாண்டு, பேச்சுவார்த்தை மூலம் அமைதியை நிலைநாட்ட முயற்சிக்கிறது.

“வெளியுறவுக் கொள்கையில் இந்தியா பலவீனமாக உள்ளது” என்று ராகுல் காந்தி போன்ற எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டிய போதிலும், மோடி அரசு தனது ராஜதந்திரத்தின் மூலம் அண்டை நாடுகளில் ஏற்படும் மாற்றங்களை சமாளிக்கிறது. வரும் காலத்தில் இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் இதுபோன்ற முயற்சிகள் நடக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.