இந்தோனேசியாவில் நம்முடைய ஒரு ரூபாய் அந்த நாட்டின் கரன்சியில் 180 என்பதால் நம்முடைய ஒரு ரூபாயிலேயே பல பொருட்களை வாங்க முடியும். இந்தோனேசியாவில் உள்ள பாலி உட்பட அற்புதமான தீவுகளுக்கு மிகக் குறைந்த செலவில் சென்று வரலாம். அதேபோல், நம்முடைய ஒரு ரூபாய் வியட்நாமில் 299 டாங்கு மதிப்புடையது. இலங்கையில் ஒரு இந்திய ரூபாய், இலங்கை ரூபாயில் மூன்று ரூபாய்க்கு சமம். எனவே, இங்கு செல்லவும் குறைவான செலவு தான் ஆகும்.
இந்திய சுற்றுலா பயணிகளுக்கு மேலும் ஒரு சிறந்த நாடு நேபாளம். இந்தியாவின் ஒரு ரூபாய் அங்கு 1 ரூபாய் 60 காசு மதிப்புடையது. இங்கு சென்றால் இமயமலையின் அழகையும் பழங்கால கோயில்களையும் கண்டு களிக்கலாம். அதேபோல், கம்போடியா, லாவோஸ், ஜிம்பாப்வே போன்ற நாடுகளுக்கும் இந்திய ரூபாயின் மதிப்பை விட குறைவாக உள்ளது. எனவே, குறைந்த செலவில் அழகான சுற்றுலா தலங்களை கண்டு திரும்பலாம்.
அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றால், இந்திய ரூபாயை விட அந்த நாடுகளின் கரன்சிகளின் மதிப்பு அதிகம். எனவே, இங்கு சுற்றுலா செலவு அதிகமாகும் என்பதை மனதில் கொண்டு, இந்திய ரூபாயின் மதிப்பு எந்தெந்த நாடுகளில் அதிகம் என்பதை கணக்கில் கொண்டு சுற்றுலா சென்றால் குறைந்த செலவில் நிறைவான சந்தோஷம் கிடைக்கும்..