இலங்கையில் கடந்த சில மாதங்களாகவே பொருளாதாரத் தட்டுப்பாடானது நிலவுகிறது. அந்நியச் செலவாணி கையிருப்பில் இல்லாத நிலையில் எரிபொருள் எதையும் வாங்க முடியாமல் திணறுகிறது.
இதனால் மக்கள் உணவில் துவங்கி பல வகையான அத்தியாவசியப் பொருட்களுக்கும் பெரிய அளவில் அவதியுற்று வருகின்றனர். அத்தியாவசியப் பொருட்களின் விலையானது தாறுமாறாக எகிற மக்கள் இந்த நிலை எப்போது சரியாகும்? இதற்கான தீர்வுதான் என்ன? என்று வருத்தத்தில் இருந்து வருகின்றனர்.
தொடரும் எரிபொருள் தட்டுப்பாட்டால் உணவு சார்ந்த பிசினஸ்களான ஹோட்டல்கள், பேக்கரிகள் போன்றவையும் மூடப்பட்டுள்ளன. மேலும் மாதக்கணக்கில் மின்சாரப் பற்றாக்குறையால் அவதியுற்று மெழுகுவர்த்தி வாழ்க்கை தள்ளப்பட்டுள்ளனர்.
இதனால் இலங்கை வாழ் மக்கள் பலரும் இந்தியாவை நோக்கி படை எடுக்கின்றனர். இதனால் இந்திய- இலங்கை எல்லைப் பகுதியில் கண்காணிப்பு பணியானது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கடலில் உயிர் போனாலும் பரவாயில்லை பட்டினியால் உயிர் போக விருப்பமில்லை என்று கண்ணீருடன் இந்தியா வந்து சேர்ந்து இலங்கைக் குடும்பம் பேசும் வீடியோ பார்ப்போரை கண் கலங்க வைக்கின்றது.
இந்திய மக்கள் உயிர் வாழ இந்தியா வந்து சேர்ந்த இலங்கை மக்களுக்கு அனைவரும் சிவப்பு கம்பளமிட்டு வரவேற்கவே செய்கின்றனர்.