கொரோனா காலத்திற்குப் பின்னர் பெரிய அளவிலான பொருளாதார வீழ்ச்சியினை தனி மனிதனில் துவங்கி மாபெரும் நாடுகளும் சந்தித்தன.
வளர்ந்த நாடுகளான அமெரிக்கா போன்ற வல்லரச நாடுகளும் பொருளாதார நெருக்கடியினை சந்தித்தது மறுக்க முடியாத உண்மையாகும்.
ஒவ்வொரு நாடுகளும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வருகையில் இலங்கை மீள முடியாமல் தவிக்கிறது.
அதாவது சுற்றுலாவை பெரும் பொருளாதார ஆதாரமாகக் கொண்டு விளங்கிய இலங்கைக்கு கொரோனா ஊரடங்கு பெரும் அடியைக் கொடுத்தது.
இலங்கை அரசு வெளிநாட்டுக் கடனாக 2,60,000 கோடி ரூபாய் கடனாகப் பெற்றுள்ளது, சீனாவிடம் இருந்து மட்டும் 37,000 கோடி ரூபாயைப் பெற்றுள்ளது.
இன்னும் ஒரு வாரகாலத்தில் 3235 கோடி ரூபாய் கடனை இலங்கை அரசு திருப்பிச் செலுத்த வேண்டிய நெருக்கடி நிலையில் உள்ளது.
ஆனால் இலங்கை அரசால் ஒரு வார காலத்தில் இந்தத் தொகையினை திருப்பி செலுத்த முடியாத காரணத்தால் சீன அரசிடம் அவகாசம் கேட்டுள்ளது இலங்கை அரசு.
அரசு முறைப் பயணமாக கொழும்பு சென்றுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்கியிடம் இதுகுறித்து இலங்கையின் இராஜபக்சே பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
பொருளாதார நெருக்கடியால் இலங்கை அரசு அத்தியாவசியப் பொருட்களின் விலையினை உயர்த்த, மக்கள் ஒருபுறம் திண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.