இந்நிலையில், இந்தியாவைச் சேர்ந்த ஒரு இளைஞர், Scam Call என நினைத்து, ஒரு முக்கியமான அழைப்பை அட்டென்ட் செய்யாமல் விட்டதால், அவருடைய எதிர்காலமே கேள்விக்குறியாகியுள்ளது.
ரெடிட் பயனர் ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில், கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளிநாட்டு நம்பரில் இருந்து ஒரு அழைப்பு வந்ததாகவும், அது Spam Call ஆக இருக்கும் என நினைத்து அதை அட்டென்ட் செய்யவில்லை எனவும் தெரிவித்துள்ளார். ஆனால் அதன் பிறகு தான் உண்மையை புரிந்து கொண்டார், அது Amazon வேலைவாய்ப்புக்கான அழைப்பு என்பதை!
“அந்த அழைப்பை நான் அட்டென்ட் செய்திருந்தால், எனக்கு வேலை கிடைத்திருக்கும், லட்சக்கணக்கில் சம்பளமும் வந்திருக்கும். ஆனால் அதைத் தவிர்த்து விட்டதால், எனக்கு கிடைக்க வேண்டிய வேலை போய்விட்டது,” என்று வருத்தத்துடன் அவர் பதிவு செய்துள்ளார்.
Truecaller போன்ற நிறுவனங்கள் இவ்வகை அழைப்புகளை தரம் பிரித்து கண்டறிய முறையாக செயல்படவில்லை என்றும், அந்த அழைப்பு “Amazon Call” என Truecaller தெரிவித்திருந்தால், எனக்கு வேலை கிடைத்திருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அவருடைய இந்த பதிவுக்கு ஏராளமானோர் ஆறுதல் கூறி வருகின்றனர். “இதைவிட பெரிய வேலை உங்களுக்கு கிடைப்பதற்காக தான் இந்த வாய்ப்பு தவறி இருக்கலாம்,” என அவருடைய நண்பர்கள் ஆறுதல் கூறி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனால், வெளிநாட்டு எண்களில் இருந்து வரும் எல்லா அழைப்புகளையும் Spam Call என எண்ணாமல், அவற்றை அட்டென்ட் செய்து, அவை உண்மையில் Scam Call ஆக உள்ளதா என்பதை உறுதி செய்த பிறகு துண்டிக்கலாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.