தேசிய விருது வாங்கிய தங்க தாமரை மகளே.. அத எஸ்பிபிகிட்ட ரஹ்மான் பாட சொன்ன விதம் தான் ஹைலைட்டே..

தமிழ் சினிமாவை பொருத்தவரையில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் பெரிய சாதனைகளை மேற்கொண்டு திடீரென பல கலைஞர்கள் காணாமல் போனது வழக்கமான ஒன்றாக இருக்கும். ஆனால் அதையெல்லாம் தாண்டி 30 முதல் 40 ஆண்டுகளுக்கு மேலானாலும்…

Thangathamarai magale spb and ar rahman

தமிழ் சினிமாவை பொருத்தவரையில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் பெரிய சாதனைகளை மேற்கொண்டு திடீரென பல கலைஞர்கள் காணாமல் போனது வழக்கமான ஒன்றாக இருக்கும். ஆனால் அதையெல்லாம் தாண்டி 30 முதல் 40 ஆண்டுகளுக்கு மேலானாலும் தங்களது புகழ் கொஞ்சம் கூட குறையாமல் தொடர்ந்து அதே திறனுடன் ரசிகர்களை கட்டி போடும் வாய்ப்பு மிக அரிதான கலைஞர்களுக்கு தான் கிடைக்கும்.

அந்த வகையில் இளையராஜா, யேசுதாஸ், ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஏ. ஆர். ரஹ்மான் என பல ஜாம்பவான்களை சொல்லிக் கொண்டே போகலாம். இந்த வரிசையில் நிச்சயம் மிக முக்கியமான ஒரு இடத்தை தமிழ் சினிமாவில் பிடித்திருந்தவர் தான் எஸ்.பி. பாலசுப்ரமணியம். கொரோனா காலத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டு மறைந்து போன எஸ்பிபி குரல் இன்றளவிலும் ஒலித்தாலே ஒருவித மெய்சிலிர்ப்பை ஏற்படுத்தும்.

ரஹ்மான்எஸ்பிபி காம்போ

எம்ஜிஆர் திரைப்படத்தில் பாடகராக அறிமுகமான எஸ். பி. பாலசுப்ரமணியம் 50,000 க்கும் மேற்பட்ட பாடல்களையும் பாடி இருந்தார். இளையராஜா, ஏ. ஆர். ரஹ்மான் தொடங்கி இந்த காலத்து அனிருத் வரைக்கும் பல இசையமைப்பாளர்களுடன் இணைந்து பணிபுரிந்துள்ள எஸ்பிபி, வயதான போதும் கூட மிக ஜாலியாக அனைவருடனும் பழகும் இயல்புடன் இருந்தார்.

இளையராஜா – எஸ்பிபி காம்போவில் உருவான பாடல்கள் ஹிட்டித்தது போலவே ஏ.ஆர். ரஹ்மானுடன் எஸ்பிபி பணிபுரிந்த பாடல்களுக்கும் இன்றளவிலும் ரசிகர்கள் கூட்டம் அதிகம் உண்டு. இந்த கூட்டணியில் உருவான பல பாடல்களை பட்டியலிட்டு கொண்டே போகலாம் என்ற சூழலில் தான் ஏ. ஆர். ரஹ்மான் இசையில் மின்சார கனவு திரைப்படத்தில் வரும் ‘தங்கத்தாமரை மகளே’ என்ற பாடலையும் அவர்தான் பாடியிருந்தார்.

அப்படியே சோம்பேறி மாதிரி..

எஸ்பிபி பாடிய இந்த பாடலுக்கு தேசிய விருதும் கிடைத்திருந்த நிலையில் இதனை ரஹ்மான் பாடச் சொன்ன விதம் தான் அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. இது தொடர்பாக மறைந்த பாடகர் எஸ்பிபி ஒரு இசை நிகழ்ச்சியில் பேசிய போது, “தங்கத்தாமரை மகளே பாடல் கொஞ்சம் புதுமையாகவும், விசித்திரமாகவும் இருக்கும். இந்த பாடலுக்கு எனக்கு தேசிய விருதும் கிடைத்திருந்தது.

இதனை ரெக்கார்டிங்கின் போது ரஹ்மான் என்னிடம், ஒரு சோம்பேறி போல பாட வேண்டும் என்று கூறினார். அதாவது பாடவே விருப்பம் இல்லாமல் இழுத்துக் கொண்டே ஒருவர் பாடினால் எப்படி இருக்குமோ அப்படி அவரை என்னிடம் பாட கூறினார்” என எஸ். பி. பாலசுப்ரமணியம் தெரிவித்திருந்தார். அவர் சொன்னது போலவே இந்த விஷயம் தெரிந்த பின்னர் அந்த பாடலைக் கேட்டால் மிக சோம்பேறியாக இழுத்துக் கொண்டே ஒருவர் பாடுவது போன்ற உணர்வைத் தரும்.

இதனை வியந்து கவனிக்கும் பலரும் ஏ. ஆர். ரஹ்மானால் தான் முடியும் என்றும் பலர் குறிப்பிட்டு வருகின்றனர்.