1 பில்லியன்ல ஒருத்தருக்கு தான் இப்டி நடக்குமாம்.. 9 வருஷத்தில் பிறந்த 4 மகள்கள்.. நான்கு பேருக்கும் இருந்த பொதுவான ஒற்றுமை..

பொதுவாக ஒருவருக்கு இரட்டையர்களாக குழந்தை பிறக்கும் போது அவர்களுக்கு இடையே நிறைய வியப்பான ஒற்றுமைகள் இருப்பதை கவனித்திருப்போம். அதையும் தாண்டி சில நேரம் நிறைய ஆண்டுகளுக்கு மத்தியில் பிறக்கும் ஒரு தாய் குழந்தைகளுக்கு கூட…

4 daughters at same birth date

பொதுவாக ஒருவருக்கு இரட்டையர்களாக குழந்தை பிறக்கும் போது அவர்களுக்கு இடையே நிறைய வியப்பான ஒற்றுமைகள் இருப்பதை கவனித்திருப்போம். அதையும் தாண்டி சில நேரம் நிறைய ஆண்டுகளுக்கு மத்தியில் பிறக்கும் ஒரு தாய் குழந்தைகளுக்கு கூட அரிதான ஒற்றுமை இருக்கலாம். ஆனால், இவை எல்லாம் பிறந்ததற்கு பின்னர் அவர்களின் குணம் உள்ளிட்ட விஷயங்கள் மூலம் ஒற்றுமையாக அமைந்திருக்கும்.

ஆனால், அதே நேரத்தில் தெற்கு கரோலினா பகுதியில் ஒரு பெண்ணிற்கு 9 ஆண்டுகளுக்குள் 4 பெண் குழந்தைகள் பிறந்துள்ள நிலையில் அவர்களுக்கு இடையே இருந்த ஒற்றுமை தான் தற்போது பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. தெற்கு கரோலினாவை சேர்ந்தவர் தான் க்ரிஸ்டன் லம்மர்ட் (Kristen Lammert).

க்ரிஸ்னுக்கு தற்போது 35 வயதாகும் நிலையில், கடந்த 9 ஆண்டுகள் இடைவெளியில் 4 பெண் குழந்தைகளை இவர் பெற்றெடுத்துள்ளார். இதில் மூத்த மகளான சோபியாவிற்கு தற்போது 9 வயதாகிறது. தொடர்ந்து, இரண்டாவது குழந்தை கியூலியானாவுக்கு 6 வயதும், 3 து மகளான மியாவிற்கு 3 வயதும் ஆகிறது. இதனைத் தொடர்ந்து கிறிஸ்டன் லம்மார்டிற்கு தற்போது 4 து பெண் குழந்தையும் பிறந்துள்ளது.

ந்த நான்கு பேரும் ஒரே நேரத்தில் பிறந்தவர்கள் இல்லை என்றாலும் இவர்களுக்கு இடையே இருந்த ஒற்றுமை அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது. கிரிஸ்டன் லம்மார்ட்டின் நான்கு மகள்களும் ஆகஸ்ட் 25 ஆம் தேதி தான் பிறந்துள்ளனர். முன்னதாக க்ரிஸ்டனின் மகள் பிறப்பதற்கு பத்து ஆண்டுகள் முன்பாக அவர் வளர்த்து வந்து நாயும் ஆகஸ்ட் 25ஆம் தேதி தான் பிறந்துள்ளது.

இதனால் அவரது மூத்த மகள் பிறந்த தினத்தை மிக வியப்பாகவும் அவர்கள் பார்த்துள்ளனர். தொடர்ந்து அடுத்த மூன்று மகன்களும் அதே தேதியில் பிறந்தது க்ரிஸ்டன் மற்றும் அவரது கணவர் நிக்கை ஆச்சரியப்படுத்தி உள்ளது. நான்கு மகள்கள் இப்படி ஒரே தேதியில் பிறப்பது 1 பில்லியனில் ஒருவருக்கு தான் நடக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

முன்னதா க்ரிஸ்டனுக்கு டந்த செப்டம்பர் 25 ஆம் தேதி தான் குழந்தை பிறக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், ஆகஸ்ட் 23 ஆம் தேதியான சமயத்தில் க்ரிஸ்டனுக்கு பிரசவ நேரத்தில் வரும் ஒரு பிரச்சனையும் உருவாகி மன அழுத்தம் மற்றும் சில றுப்புகளும் செயலிழக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

தனால், அப்போதே அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்க, நான்காவது மகளும் ஆகஸ்ட் 25 ஆம் தேதி பிறந்ததாக கூறப்படுகிறது. இரண்டு குழந்தைகளை ஒரு பெண் சில வருடங்களுக்கு நடுவே பெற்றெடுத்தாலும் ஒரே தேதியில் பிறப்பது அபூர்வமான விஷயமாக பார்க்கப்படுகிறது. அப்படி இருக்கையில், நான்கு மகள்களும் ஒரே தேதியில் பிறந்துள்ளது அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.