35 மாடல் ஆண்ட்ராய்டு போன்களில் இனி வாட்ஸ்அப் இயங்காது.. இதில் உங்கள் போன் இருக்குதா?

Published:

இன்னும் சில வாரங்களில் 35 மாடல் ஆண்ட்ராய்டு போன்கள் மற்றும் சில ஐஓஎஸ் ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ் அப் சேவை நீக்கப்பட உள்ளதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வாட்ஸ்அப் சமூக வலைதளம் தற்போது உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான நபர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பதும் செய்திகளை பரிமாறிக் கொள்ள, புகைப்படம் பரிமாறிக்கொள்ள, வீடியோக்கள் பரிமாறிக்கொள்ள மற்றும் வீடியோ கால், ஆடியோ கால் பேச, பண பரிமாற்றம் செய்து கொள்ள என வாட்ஸ் அப் தான் தற்போது அனைவருக்கும் உபயோகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வாட்ஸ்அப் செயலியில் சில புதிய மாற்றங்கள் செய்யப்பட இருப்பதால் பழைய ஸ்மார்ட்போன்களில் இனி வாட்ஸ்அப் இயங்காது என்று கூறப்படுகிறது. அதாவது இன்னும் ஒரு சில வாரங்களில் 35க்கும் மேற்பட்ட ஆண்ட்ராய்டு மற்றும் சில ஐஓஎஸ் ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் இயங்காது என்று கூறப்படுகிறது.

குறிப்பாக ஆண்ட்ராய்டு 5.0 மற்றும் அதற்கு மேற்பட்ட பதிப்பில் மட்டுமே வாட்ஸ் அப் இயங்கும். உங்கள் தொலைபேசி இதைவிட குறைவான பதிப்பில் இருந்தால் உடனடியாக சாப்ட்வேரை புதுப்பிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 35 மாடல்களில் சாம்சங், ஆப்பிள், எல்ஜி, சோனி போன்ற நிறுவனங்களின் மாடல்களும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் சில நாட்களில் இருந்து எந்தெந்த போன்களில் வாட்ஸ்அப் இயங்காது என்பதை தற்போது பார்ப்போம்.

Samsung Galaxy Ace Plus
samsung galaxy core
Samsung Galaxy Express 2
Samsung Galaxy Grand
Samsung Galaxy Note 3
Samsung Galaxy S3 Mini
Samsung Galaxy S4 Active
Samsung Galaxy S4 Mini
Samsung Galaxy S4 Zoom
SonyXperia Z1
onyXperia E3
Huawei Ascend P6
Huawei Ascend G525
Huawei C199
Huawei GX1s
Huawei Y625
LG Optimus 4X HD
LG Optimus G Pro
iPhone 6S
iPhone 6S Plus

மேலும் உங்களுக்காக...