ChatGPTயால் சாப்ட்வேர் இன்ஜினியர் பணியை இழந்த இளைஞர் ஒருவர் தற்போது பெங்களூரில் ரேபிடோ டிரைவராக பணி செய்து கொண்டிருப்பதாகவும் அதில் கிடைக்கும் வருமானம் தனது குடும்பத்தினரின் சாப்பாட்டிற்கு கூட போதவில்லை என்றும் பதிவு செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏஐ தொழில்நுட்பம் காரணமாக பல இளைஞர்கள் வேலை இழந்து வருகின்றனர் என்பதை பார்த்து வரும் நிலையில் எச்சிஎல் நிறுவனத்தில் சாப்ட்வேர் எஞ்சினியராக பணி செய்த் வந்த இளைஞர் சீனிவாசன் என்பவர் சமீபத்தில் வேலை இழந்தார்.
இதனை அடுத்து அவர் தனது குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்ற காரணத்தினால் தற்போது ராபிடோ டிரைவராக பணி செய்து கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் அவர் தனது வாடிக்கையாளர்களிடம் பேச்சு கொடுத்து நான் ஒரு ஜாவா டெவலப்பர் என்றும் உங்களுக்கு தெரிந்தவர்களிடம் ஏதாவது வேலை வாய்ப்பு இருந்தால் கூறுங்கள் என்றும் கூறி வருகிறார்.
அந்த வகையில் இந்த சாப்ட்வேர் இன்ஜினியர் கதையை கேட்ட ஒருவர் தனது சமூகவலைதளத்தில் அவருடைய விவரங்களை குறிப்பிட்டு இவருக்கு யாராவது நல்ல வேலை கிடைக்க உதவுங்கள் என்று பதிவு செய்து உள்ளார். மேலும் அவரது கல்வி தகுதி, வயது, அனுபவம் ஆகிய தகவல்களையும் பதிவு செய்துள்ளார். இதனை அடுத்து அவருக்கு வேலை கொடுக்க உதவி செய்வதாக பலர் உறுதி அளித்துள்ளனர்
இதுகுறித்து சீனிவாசன் பேட்டி அளித்தபோது இரண்டு வருடங்களுக்கு முன்னர் தான் ஹெச்சிஎல் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்ததாகவும், கை நிறைய சம்பளம் கிடைத்ததால் குடும்பம் மிகவும் மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்ததாகவும், ஆனால் ஏஐ தொழில்நுட்பம் காரணமாக திடீரென ஒரு நாள் தன்னை வேலையில் இருந்து நிர்வாகம் நீக்கிவிட்டது என்றும் கூறியுள்ளார்.
இதனை அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த நான் தற்போது ராபிடோவில் டிரைவராக பணி செய்து வருகிறேன். விரைவில் எனக்கு ஒரு நல்ல வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.