அமெரிக்காவில் விர்ஜினியா மாகாணத்தில் உள்ள ஒரு டிரான்ஸ்பார்மரில் புகுந்த பாம்பு செய்த வேலை காரணமாக அந்த பகுதி மக்கள் மணிக்கணக்கில் கரண்ட் இல்லாமல் தவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவில் உள்ள விர்ஜினியா மாகாணத்தில் நேற்று திடீரென ட்ரான்ஸ்பார்மரில் நுழைந்த பாம்பு ஒன்று டிரான்ஸ்பார்மரின் முக்கிய பகுதிகளை சேதப்படுத்தியதாக தெரிகிறது. இதன் காரணமாக அந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்த நிலையில் உடனடியாக மின்சார துறையினர் டிரான்ஸ்பார்மர் இருக்கும் இடத்திற்கு வருகை தந்து பழுதை நீக்கினார்கள்.
அப்போது இந்த பழுது ஒரு பாம்பினால் தான் ஏற்பட்டது என்பதை கண்டுபிடித்து அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அந்த பாம்பை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்த பின்னர் மின்சார பழுது நீக்கம் செய்யப்பட்டதாகவும் அதன் பின்னர் தான் அந்த பகுதிக்கு மின்சார விநியோகம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதன் காரணமாக விர்ஜினியா பகுதி மக்கள் மனக்கணக்கில் மின்சாரம் இல்லாமல் தவித்ததாக கூறப்படுகிறது. டிரான்ஸ்பார்மர் இருக்கும் பகுதியில் பாம்பு நுழையாத வண்ணம் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கூறி வருகின்றனர்.
ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இதே போன்ற பிரச்சனை ஏற்பட்டதாகவும் இனிமேல் இதுபோன்ற பிரச்சினை ஏற்படாத வகையில் மின்சார துறையினர் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.