பெரும்பாலும் இது உங்கள் அருகில் இருக்கும் நபர்களால் தான் செய்யப்படுகிறது. அதாவது சந்தேகம் உள்ள வாழ்க்கை துணை, பழைய உறவினரிடம் உள்ள கோபம், குடும்பத்தினர் ஆகியோர்கள் தான் அதிகம் பயன்படுத்துவதாக தெரிகிறது.
Stalkerware எனப்படும் கண்காணிப்பு மென்பொருட்கள், சாதாரண செயலிகளாகவே இருக்கும். ஆனால் அது உங்கள் நடமாட்டத்தை கண்காணிக்க்கும், உங்களுடைய தகவல்களை படிக்கும், புகைப்படங்கள் பார்க்கும். கேமரா மற்றும் மைக்ரோஃபோனை கூட தொலை நிலையிலிருந்து இயக்கலாம். பலரும், தங்கள் மொபைலில் இப்படிப்பட்ட செயலிகள் இருப்பதை அறியவே முடியாது.
பொதுவாக Wi-Fi பயன்படுத்துகிறீர்களா? அதுவும் பொதுவாக கிடைக்கும் இலவச Wi-Fi பயன்படுத்துகிறீர்களா? அதுதான் ஹேக்கர்களுக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி. இதன் மூலம் உங்கள் வங்கிக் கணக்கு விவரங்கள், கடவுச்சொற்கள் கூட ஹேக்கர்களிடம் சென்று விடலாம். மேலும் போலியான Wi-Fi அமைத்து, உங்களை ஏமாற்றி தகவல்களை திருடவும் முயற்சிக்கலாம்.
உங்கள் மொபைல் கண்காணிக்கப்படுகிறதா? என்பதை எப்படி கண்டுபிடிப்பது?
1. பேட்டரி வேகமாக குறைகிறதா?
2. மொபைல் டேட்டா பயன்பாடு திடீரென்று அதிகரிக்கிறதா?
3. அறியப்படாத செயலிகள் உங்களுடைய போனில் தோன்றுகிறதா?
4. உங்கள் அனுமதி இல்லாமல் Settings மாறுகிறதா? இதெல்லாம் உங்கள் மொபைல் கண்காணிக்கப்படுகிறது என்பதற்கான அறிகுறிகள் ஆகும்.
மேலும் நீங்கள் உங்கள் மொபையில் கண்காணிப்பு செயலியை கண்டுபிடித்தால் அந்த செயலிகளை உடனடியாக நீக்க வேண்டாம். ஏனெனில் அவை முக்கியமான ஆதாரங்களாக இருக்கலாம். உடனே கடவுச்சொற்களை மாற்றுங்கள், இரட்டை அடையாள உறுதி (2FA) செயல்படுத்துங்கள். அடுத்ததாக சைபர் குற்றப்பிரிவு வழியாக புகார் அளிக்கவும்.
இறுதியாக உங்கள் ஸ்மார்ட்போன் தீங்கிழைக்கும் கருவி அல்ல. ஆனால், தவறான கையில் சிக்கினால் அது ஆபத்தான ஆயுதமாக மாறலாம். இந்தியாவில் டிஜிட்டல் ஸ்டாக்கிங் அதிகரித்துவரும் நிலையில், எச்சரிக்கையாக இருப்பதே முதல் பாதுகாப்பு. எனவே உங்கள் மொபைலை புத்திசாலித்தனமாக மட்டும் பயன்படுத்த வேண்டாம், பாதுகாப்பாகவும் பயன்படுத்துங்கள்!