இந்த நிலையில் சிந்தாமணி வீட்டிற்கு முத்து மற்றும் அவரது குழுவினர் செல்ல, அங்கிருந்து அடியார்கள் அவர்களை பார்த்து பயந்து நடுங்குகின்றனர்.. எல்லோருடைய செல்போனையும் வாங்கி வைத்துக்கொண்டு வீடு முழுவதும் பணத்தை தேடுகின்றனர்.
சிந்தாமணி அப்போதுதான் முத்துவின் திட்டப்படி பார்வதி வீட்டுக்கு கிளம்புகிறார். வீடு முழுவதும் அலசி பார்த்ததில், முத்து கையில் அந்த பணம் மாட்டி விடுகிறது. பீரோவில் ஒரு மஞ்சப்பையில் அந்த பணம் இருந்ததை முத்து பார்த்துவிட, உடனே அவர் எல்லோரிடமும் கூறுகிறார் ’சரி பணம் தான் கிடைத்துவிட்டது, எல்லோரும் கிளம்புவோம்’ என்று தயாராகின்றனர்..
அப்போது திடீரென சிந்தாமணி ’தனக்கு வயிறு வலிக்கிறது’ என்றும், ’அதனால் உடனடியாக வீட்டுக்கு செல்ல வேண்டும்’ என்றும் கூறுகிறார்.
உடனே கார் திருப்பப்படுகிறது. கார் சிந்தாமணி வீட்டை நோக்கி வந்து கொண்டிருக்கும் நிலையில், முத்து மற்றும் குழுவினர் பணத்தை எடுத்துக் கொண்டு வெளியே கிளம்ப தயாராக வந்தவுடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வருகிறது.