இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் மட்டும் 51 லட்சம் மியூச்சுவல் ஃபண்ட் எஸ்ஐபிக்கள் (SIP) வாடிக்கையாளர்களால் முடிக்கப்பட்டதாக என்று AMFI வெளியிட்ட புதிய தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, தொடர்ந்து மூன்றாவது மாதமாக புதிய எஸ்ஐபி பதிவு எண்ணிக்கையை விட நிறைவு செய்யப்பட்ட எஸ்ஐபி எண்ணிக்கை அதிகமாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மார்ச் மாதத்தில் நிறைவு செய்யப்பட்ட எஸ்ஐபிகள் 51 லட்சம் என்றும், புதிய எஸ்ஐபி பதிவுகள் 40 லட்சம் என்றும் நிறைவு விகிதம் (Stoppage Ratio) 127.5% என்றும் புதிய தரவுகள் தெரிவிக்கின்றன. அதாவது, 100 புதிய எஸ்ஐபிகள் பதிவு செய்யப்பட்டிருக்கும் ஒவ்வொரு நேரத்திற்கும், 127.5 எஸ்ஐபிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளது. இதில், காலாவதியான திட்டங்களும் அடங்கும்.
மார்ச் மாதத்திற்கு முந்தைய இரண்டு மாதங்களில் அதாவது ஜனவரியில் 109%
மற்றும் பிப்ரவரியில் 122% SIP முடிக்கப்பட்டுள்ளது.
இந்த உயர்ந்த நிறைவு விகிதம், மியூச்சுவல் ஃபண்ட் துறைக்கு சமீபத்திய காலத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய சவாலாக கருதப்படுகிறது. முதலீட்டாளர்கள் இடையே நம்பிக்கைக் குறைவு அல்லது சந்தை நிலைமைகள் இதற்குக் காரணமாக இருக்கலாம்.
மியூச்சுவல் ஃபண்ட் வருவாய் சற்று கூட இந்த ஆண்டு குறைந்துள்ளது.
மார்ச் மாத எஸ்ஐபி வருவாய் – ₹25,926 கோடி
பிப்ரவரி 2025 எஸ்ஐபி வருவாய் – ₹25,999 கோடி
சரிவு – சுமார் 0.28%
மற்ற முக்கிய புள்ளிவிவரங்கள்
மார்ச் 2025-ல் புதிய எஸ்ஐபி பதிவுகள் – 40.18 லட்சம்
பிப்ரவரி 2025-ல் – 44.56 லட்சம்
செயலில் உள்ள எஸ்ஐபி கணக்குகள் (SIP Accounts):
மார்ச் – 8.11 கோடி
பிப்ரவரி – 8.26 கோடி
SIP வழியாக நிர்வகிக்கப்படும் சொத்துகள் (AUM):
மார்ச் – ₹13.35 லட்சம் கோடி
பிப்ரவரி – ₹12.37 லட்சம் கோடி
மியூச்சுவல் ஃபண்ட் ஃபோலியோக்கள் எண்ணிக்கை:
மார்ச் – 23,45,08,071
பிப்ரவரி – 23,22,80,804
உலக அளவில் பொருளாதாரம் மந்த நிலை காணப்படுவதால் எஸ்ஐபி மீதான ஆர்வம் பொதுமக்களுக்கு குறைந்துள்ளது என்றும் ஆனால் இது தற்காலிகமானது தான் மீண்டும் பொருளாதார நிலைத்தன்மை ஏற்பட்டவுடன் எஸ்ஐபி யில் முதலீடு செய்யும் விகிதம் அதிகமாகும் என்றும் பொருளாதார வல்லுநர்கள் கூறி வருகின்றனர்.