தமிழக அரசியலில் வரும் 2026 சட்டமன்ற தேர்தல் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், திரையுலகில் இருந்து அரசியல் களத்திற்கு வந்துள்ள நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றி கழகம்’ குறித்த எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, சிங்கப்பூரை சேர்ந்த ஒரு பெரிய தமிழ் தொழில்முனைவோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் குழு, கடந்த சில வாரங்களாக தமிழகத்தில் தங்கியிருந்து ரகசியமாக ஒரு கள ஆய்வை நடத்தியுள்ளதாகவும், இந்த ஆய்வின் முடிவுகள் தற்போது வெளியாகி அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சிங்கப்பூர் தமிழர்கள் குழு தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் உள்ள இளைஞர்கள், பெண்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்களின் மனநிலையை மிக துல்லியமாக ஆய்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சர்வேயில் பல வியக்கத்தக்க தகவல்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, பாரம்பரிய அரசியல் கட்சிகளின் மீது ஒருவித அதிருப்தியில் இருக்கும் மக்கள், ஒரு புதிய மாற்றத்தை நோக்கி நகர தயாராக இருப்பதை இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. இந்த சர்வே ரிப்போர்ட்டை தயார் செய்த கையோடு, அந்தக் குழுவினர் சமீபத்தில் நடிகர் விஜய்யை நேரில் சந்தித்து விவரங்களை விவரித்துள்ளனர்.
இந்த சந்திப்பின் போது, சர்வே முடிவுகள் தவெகவிற்கு மிகவும் சாதகமாக இருப்பதை அவர்கள் ஆதாரங்களுடன் விளக்கியுள்ளனர். குறிப்பாக, “தமிழகத்தின் அடுத்த சி.எம் நீங்கள்தான்” என்று அந்த குழுவினர் விஜய்யை வாழ்த்தி சென்றதாகத் தகவல்கள் கசிகின்றன. இந்த தகவல்களை கேட்ட விஜய், பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் செய்யாமல், அந்த ரிப்போர்ட்டை ஆழ்ந்து கவனித்ததோடு மட்டுமல்லாமல், ஒரு மெல்லிய புன்னகையை மட்டும் பதிலைத் தந்துள்ளார். அவரது இந்த புன்னகைக்கு பின்னால் மிகப்பெரிய அரசியல் வியூகம் ஒளிந்திருப்பதாக அவரது தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
தமிழகத்தில் தற்போது ஒரு அமைதியான அரசியல் புரட்சி நடந்து கொண்டிருக்கிறது என்பதற்கு இந்த சிங்கப்பூர் குழுவின் சர்வே ஒரு சாட்சியாக பார்க்கப்படுகிறது. மக்கள் வெளிப்படையாக பேச தயங்கினாலும், தங்களது வாக்குகளின் மூலம் ஒரு பெரிய மாற்றத்தை கொண்டுவரத் துடித்து கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக, கார்ப்பரேட் பாணி அரசியலுக்கும், குடும்ப அரசியலுக்கும் அப்பாற்பட்டு ஒரு நேர்மையான தலைமையை தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அந்த இடத்தை விஜய் நிரப்புவார் என்பதே சிங்கப்பூர் தமிழர்களின் கணிப்பாக உள்ளது.
இந்த ரகசிய சர்வே ரிப்போர்ட் இப்போது திமுக மற்றும் அதிமுக பிரபலங்களை அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அடிமட்டத்தில் ஒரு பலமான அலை உருவாகி வருவதை உணர்ந்திருக்கும் விஜய், தனது அடுத்தகட்ட நகர்வுகளை மிக நிதானமாகவும் துல்லியமாகவும் திட்டமிட்டு வருகிறார். 2026-ல் நடக்கப்போகும் இந்த ‘அமைதியான புரட்சி’ தமிழக அரசியலின் தலையெழுத்தையே மாற்றப்போவது மட்டும் உறுதி.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
