இந்தியாவின் மிகப்பெரிய வங்கி அமைப்பான எஸ்பிஐ, டாடா குரோமா உள்ளிட்ட பல நிறுவனங்களுடன் இணைந்து வெற்றிகரமாக கிரெடிட் கார்டு சேவைகளை வழங்கி வரும் நிலையில், தற்போது சிங்கப்பூர் ஏர்லைன்ஸுடன் இணைந்து புதிய கிரெடிட் கார்டை அறிமுகம் செய்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்த புதிய கிரெடிட் கார்டு, விமானம் மூலம் அதிகம் பயணிக்கின்ற பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எஸ்பிஐ கார்டு நிறுவனம் சிங்கப்பூர் ஏர்லைன்ஸுடன் இணைந்து ‘கிரிஸ்ஃப்ளையர் எஸ்பிஐ கார்டு’ என்ற புதிய பிரத்யேக கிரெடிட் கார்டை அறிமுகம் செய்துள்ளது. இதனால் பயணிகள் விமானத்திலும், தரையிலும் பல்வேறு சிறப்பு சலுகைகளை அனுபவிக்க முடியும்.
இந்த கிரெடிட் கார்டு இரண்டு மாடல்களில் கிடைக்கிறது: ‘கிரிஸ்ஃப்ளையர் எஸ்பிஐ கார்டு’ மற்றும் ‘கிரிஸ்ஃப்ளையர் எஸ்பிஐ கார்டு எய்பெக்ஸ் என அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் இந்த கார்டுகளை வாடிக்கையாளர்கள் எஸ்பிஐ கார்டு இணையதளம் அல்லது சில்லறை மையங்களின் மூலம் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.