செங்கோட்டையன் அவருக்கு கேட்டை திருந்து வைக்கல.. முடிவெடுக்க முடியாமல் தடுமாறுபவர்களுக்கு கேட்டை திறந்து வைத்துள்ளார். இனி வாரத்திற்கு ஒரு தலைவர் தவெகவுக்கு வருவாங்க.. டிசம்பர் இறுதிக்குள் 30 பிரபல அரசியல்வாதிகள் தவெகவுக்கு வர வாய்ப்பு.. இனி அடுத்த 25 வருடங்களுக்கு தவெக தமிழக அரசியலில் மையப்புள்ளி.. 6 அரசியல் கட்சிகள் தவெக கூட்டணிக்கு வர தயார்..!

அ.தி.மு.க.வின் மூத்த தலைவர் செங்கோட்டையன், அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பிடிவாத போக்கைக் கண்டித்ததால், கட்சியில் இருந்து விலக்கப்பட்ட நிலையில், தற்போது அவர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தது தமிழ்நாட்டு அரசியலில் ஒரு திருப்புமுனையாக…

sengottaiyan

அ.தி.மு.க.வின் மூத்த தலைவர் செங்கோட்டையன், அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பிடிவாத போக்கைக் கண்டித்ததால், கட்சியில் இருந்து விலக்கப்பட்ட நிலையில், தற்போது அவர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தது தமிழ்நாட்டு அரசியலில் ஒரு திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது. இந்த விலகல், செங்கோட்டையன் தனக்காக ‘கேட்டைத் திறந்து வைக்கவில்லை’, மாறாக அ.தி.மு.க.வில் முடிவெடுக்க முடியாமல் தடுமாறும் பல மூத்த தலைவர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் வெளியேறும் வழியை திறந்து வைத்துள்ளார் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

செங்கோட்டையனின் இந்த துணிச்சலான முடிவு, அ.தி.மு.க. மற்றும் இதர கட்சிகளில் அதிருப்தியில் இருக்கும் பல முக்கிய நிர்வாகிகளுக்கு புதிய பாதையை காட்டியுள்ளது. இதனால், இனி வாரத்திற்கு ஒரு முக்கிய அரசியல் தலைவர் அல்லது பிரபல நிர்வாகி த.வெ.க.வில் இணைவதற்கு வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக, சட்டமன்ற தேர்தல் நெருங்குவதற்கு முன்னதாக, டிசம்பர் மாத இறுதிக்குள் சுமார் 30 பிரபல அரசியல்வாதிகள் அதாவது முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள் உட்பட என த.வெ.க.வில் இணைவதற்கான பேச்சுவார்த்தைகள் திரைமறைவில் தீவிரமாக நடந்து வருவதாக கூறப்படுகிறது. இவர்களின் வருகை, த.வெ.க.வின் அமைப்பு பலத்தை உடனடியாக உயர்த்துவதுடன், அந்த கட்சி மீதான நம்பகத்தன்மையையும் அதிகரிக்கும்.

நடிகர் விஜய் ஆரம்பித்த த.வெ.க., தனது முதல் தேர்தலிலேயே தமிழ்நாட்டின் அரசியலில் ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக மாறக்கூடிய சாத்தியக்கூறுகள் உருவாகியுள்ளன. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்ற மக்கள் செல்வாக்குள்ள தலைவர்களின் மறைவுக்கு பிறகு, தமிழக மக்கள் ஒரு புதிய, நம்பகமான தலைமைக்காக காத்திருக்கின்றனர். செங்கோட்டையன் போன்ற அனுபவம் வாய்ந்த தலைவர்கள் இணைவது, த.வெ.க.வை வெறும் ஒரு தேர்தல் கட்சியாக அல்லாமல், அடுத்த 25 ஆண்டுகளுக்கும் தமிழக அரசியலின் மையப்புள்ளியாக நிலைநிறுத்தும் என்று அரசியல் நோக்கர்கள் அறுதியிட்டுக் கூறுகின்றனர்.

அ.தி.மு.க.வால் ஒரு உறுதியான கூட்டணியை அமைக்க முடியாமல் ஈ.பி.எஸ். தடுமாறும் நிலையில், த.வெ.க.விற்கு பல கட்சிகள் கூட்டணிக்கு வர தயாராக உள்ளன. தற்போது நிலவும் குழப்பமான அரசியல் சூழலை பயன்படுத்தி, சுமார் 6 அரசியல் கட்சிகள் த.வெ.க.வுடன் கூட்டணி அமைப்பதற்கான ஆர்வத்தையும், விருப்பத்தையும் வெளிப்படுத்தியுள்ளன.

நான்காவது அணியாக களம் காணும் த.வெ.க., இந்த தலைவர்களின் வருகை மற்றும் கூட்டணி பலத்தால், முதல் தேர்தலிலேயே கணிசமான இடங்களை பிடித்து, ‘கிங் மேக்கர்’ என்ற நிலைக்கு உயர வாய்ப்புள்ளது. எடப்பாடி பழனிசாமியின் பிடிவாதத்தால் வெளியேறிய செங்கோட்டையனின் நகர்வு, அ.தி.மு.க.வின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குவதுடன், த.வெ.க.வின் அரசியல் விதியை முற்றிலும் மாற்றி எழுதியுள்ளது என்பதில் சந்தேகம் இல்லை.